LATEST

Monday, January 13, 2020

TNPSC வரலாறு - விஜயநகர மற்றும் பாமினி அரசுகள் ஒரு வரி வினாக்கள் பகுதி 2

Magme Guru

விஜயநகர மற்றும் பாமினி அரசுகள் ஒரு வரி வினாக்கள்

பகுதி 2


1. விஜய நகரப் பேரரசு ----------------- முக்கிய மரபினர்களால் ஆளப்பட்டது
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
விடை: ஆ) நான்கு

2. கிருஷ்ண தேவராயர் மரபைச் ------------------- சேர்ந்தவர்
அ) சங்கம
ஆ) சாளுவ
இ) துளுவ
விடை: இ) துளுவ

3. தலைக்கோட்டைப் போரில் ----------- தோற்கடிக்கப்பட்டார்
அ) இராமராயர்
ஆ) இரண்டாம் ஹரிஹரர்
இ) முதலாம் புக்கர்
விடை: அ) இராமராயர்

4. ஹசன்கங்கு பாமினி தேவகிரியைச் சேர்ந்த ----------------- அலுவலர் ஆவார்
அ) பாரசீக
ஆ) துருக்கிய
இ) அரேபிய
விடை: ஆ) துருக்கிய

5. பெரோஸ் ஷா பாமினி தன் தலைநகரை குல்பர்காவிலிருந்து ------------க்கு மாற்றினார்
அ) பீஜப்பூர்
ஆ) விஜயநகர்
இ) பீடார்
விடை: இ) பீடார்

6. தராஃபுகள் ---------------- எனப்பட்டன
அ) மாநிலங்கள்
ஆ) மாவட்டங்கள்
இ) கிராமங்கள்
விடை: அ) மாநிலங்கள்

7. கோல்கும்பாஸ் உள்ள இடம் ---------------
அ) பீரார்
ஆ) பீடார்
இ) பீஜப்பூர்
விடை: இ) பீஜப்பூர்

8. ஹரிஹரர், புக்கர் விஜயநகரப் பேரரசை துங்கபத்ரா ஆற்றின் தென்கரையில் உருவாக்கினார்

9. விஜயநகரப் பேரரசில் மன்னரே நாட்டின் தலைமை நீதிபதியாக விளங்கினார்

10. கிருஷ்ணதேவராயர் அமுக்த-மால்யதா என்ற நூலை தெலுங்கு மொழியில் எழுதினார்

No comments:

Post a Comment