LATEST

Monday, January 20, 2020

வரலாறு - மொகலாயர்கள் வருகை பகுதி 3

வரலாறு

மொகலாயர்கள் வருகை பகுதி  3

1. டெல்லி பேரரசின் கடைசி சுல்தான் இப்ராஹிம் லோடி.

2. பஞ்சாபின் ஆளுநர் தௌலத்கான் லோடி பாபரை இந்தியாவிற்கு எதிராக படையெடுக்குமாறு அழைத்தார்.

3. பாபர் தந்தையின் வழியில் தைமூர் இனத்தைச் சார்ந்தவர்.

4. பாபரின் சுயசரிதை பாபரின் நினைவுகள் என்று அழைக்கப்படுகிறது.

5. காம்ரான், அஸ்காரி, ஹிண்டால் ஆகியவர்கள் உமாயூனின் சகோதரர்கள் ஆவர்.

6. உமாயூன் 15 ஆண்டுகளாக நாடோடியாக வாழ்ந்தார்.

7. ஷெர்ஷாவால் நிறுவப்பட்ட பேரரசு சூர் வம்சம் என அழைக்கப்பட்டது.

8. கி.பி. 1539 ஆம் ஆண்டு சௌசா என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஷெர்ஷா உமாயூன்ஐ தோற்கடித்தார்.

9. ஷெர்ஷா அலாவுதின் கில்ஜி பின்பற்றிய இராணுவக் கொள்கையைப் பின்பற்றினார்.

10. இரண்டாம் பானிப்பட் போர் மூலம் முகலாயரின் ஆட்சி மீண்டும் டெல்லியில் நிலை நாட்டப்பட்டது.

No comments:

Post a Comment