LATEST

Wednesday, January 29, 2020

கிராம நிர்வாக அலுவலர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பகுதி 3

கிராம நிர்வாக அலுவலர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பகுதி 3

வெள்ளம் / புயல் / வறட்சியால் பாதிக்கப்பட்ட பல்வகை பயிர்களுக்கான நிவாரம்
•    மழையை நம்பி பயிர் செய்யப்படும் பகுதிகள் 1 ஹெக்டருக்கு – ரூ. 1000
•    உறுதியளிக்கப்பட்ட பாசன வசதியுள்ள பகுதிகள் 1 ஹெக்டருக்கு – ரூ. 2500
•    ஆண்டு முழுவதும் உள்ள பயிர்கள் 1 ஹெக்டருக்கு - ரூ. 4000
•    முசுக்கோட்டை மரம் 1 ஹெக்டருக்கு – ரூ.1500
•    மேற்கண்டவை அனைத்தும் சிறு, குறு விவசாயிகளுக்கான பயிர் இழப்பிற்கான நிவாரணத் தொகையாகும். இதனுடன் அவர்களுக்கு, மான்யம் 50 சதவீதமும் வழங்கப்படுகிறது.
•    மற்ற விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 1000 வீதம் அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு மட்டும் நிவாரண நிதி வழங்கப்படுக்கிறது
 
சிறப்பு நிவாரண நிதிகள்
•    முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 50,000 உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. ஏற்கனவே நிவாரண நிதி ரூ. 15000 வழங்கப்பட்டிருந்தால், மீதியுள்ள தொகை மட்டுமே வழங்கப்படும்.
•    பாரதப் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 50000 வழங்கப்படுகிறது.
 
கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள்
•    பேரிடர்களால் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான நிவாரணங்கள் அனைத்தும் கிராம நிர்வாக அலுவலர்களைக் கொண்டே நிறைவேற்றப்படுகின்றன. ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாகப் பயன்பெற கீழ்க்கண்ட நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
•    நிவாரணம் பெறும் பயனாளிகளின் பட்டியலைத் தயார் செய்யும் போது உண்மைத் தன்மை / சேதத் தன்மை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
•    பயனாளிகளுக்கு எந்த விநியோக மையத்தில் எந்தத் தேதியில் நிவாரணம் வழங்கப்படுகிறது என்பதையும் எந்தெந்த ஆதாரங்களுடன்(குடும்ப அட்டை போன்றவை) வரவேண்டும் என்பதையும் தண்டோரர்கள் மூலம் அற்விக்க வேண்டும்.
•    முன்கூட்டியே பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். கூட்டத்தைக் கட்டுப்பத்த காவல்துறையினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
•    நிவாரணங்கள் வழங்கப்படும் போது வெளியாட்கள், சமூக விரோதிகளின் ஊடுருவல் மற்றும் தலையீடுகளை தவிர்க்க வேண்டும்
•    நிவாரணங்களை பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக அவர்களிடமிருந்து கையொப்பம் பெற வேண்டும்.
•    ஒப்புமைச் சீட்டின் இறுதியில் VAO – “என்னால் பயனாளியின் அடையாளம் காட்டப்பட்டு நிவாரணம் உரிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது” என்ற சான்றினை எழுதி கையொப்பம் இட வேண்டும்.
•    பாரதப் பிரதமர் நிவாரணத் தொகை பெற முயற்சிக்கும் பயனாளிகளுக்காக அனுப்பப்படும் அறிக்கைகளில் பிரதேசப் பரிசோதனை , முதல் தகவல் அறிக்கை, வாரிசுதாராரின் வங்கி சேமிப்பு கணக்கு எண் மற்றும் வங்கியின் பெயர், இடம் போன்ற விபரங்கள் இருக்க வேண்டும். காலதாமதமான அறிக்கைகள் பாரதப் பிரதமர் அலுவலகத்தில் ஏற்க முடியாமல் போய்விட நேரிடும். ஆகவே இவ்வினத்தில் உடனடி நடவடிக்கைகளை கிராம நிர்வாக அலுவலர் மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment