LATEST

Wednesday, January 29, 2020

இந்தியாவின் இயற்கையமைப்பு பகுதி 3

இந்தியாவின் இயற்கையமைப்பு

கடற்கரைச் சமவெளிகளும் தீவுகளும்


•    தக்காணப் பீடபூமியின் கிழக்கில் கிழக்குக் கடற்கரைச் சமவெளியும்,மேற்கில் மேற்குக் கடற்கரைச் சமவெளியும் அமைந்துள்ளன.

•    கிழக்குக் கடற்கரைக் சமவெளி மகாநதி டெல்டா பகுதியிலிருந்து கன்னியாகுமரி வரை பரவியுள்ளது. 50 முதல் 250 கிமீ வரை அமைந்துள்ளது.

•    மகாநதி டெல்டா, கிருஷ்ணா டெல்டா,கோதாவரி டெல்டா ஆகிய டெல்டாக்கள் இக்கடற்கரைச் சமவெளியில்அமைந்துள்ளன. சில்கா ஏரி மற்றும் புலிக்காட் ஏரி ஆகிய இரண்டும் இதில் தான் உள்ளன.

•    கிழக்குக் கடற்கரைச் சமவெளியை சோழ மண்டலக் கடற்கரை என்றும் வழங்குவர்.

•    சோழ மண்டலக் கடற்கரையின் வடபகுதி அதாவது ஒரிசா மாநிலத்தின் கடற்கரைப்பகுதி, உத்கல் கடற்கரைச் சமவெளி என்றும், அதன்கீழ் வடசார்க்கார் கடற்கரைச் சமவெளி (ஆந்திரப்பகுதி) என்றும் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் காவிரி டெல்டா இக்கடற்கரைச் சமவெளியின் சிறப்பம்சம் ஆகும்.

•    மேற்குக் கடற்கரைச் சமவெளி வடக்கில் சூரத் (குஜராத்) முதல் தெற்கில் திருவனந்தபுரம் (கேரளா) வரை பரவியுள்ளது. இக்கடற்கரைச் சமவெளியின் வடபகுதி கொங்கணக் கடற்கரை என்றும், தென்பகுதி மலையாளக் கடற்கரை அல்லது மலபார்கடற்கரை என்றும் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட நடுப்பகுதி கன்னடக்கடற்கரை என்றும் வழங்கப்படுகிறது.

•    வெம்புநாடு என்னும் உப்பு ஏரி இக்கடற்கரைச் சமவெளியில் தான் அமைந்துள்ளது. இக்கடற்கரைச் சமவெளியில் தான் மும்பை மற்றும் மப்மகோவா துறைமுகங்கள் அமைந்துள்ளன.

•    தீபகற்ப இந்தியாவின் பிளவுகள் ஏற்பட்டபோது மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மேற்கில் வடக்கு தெற்காக ஏற்பட்ட பிளவின் வழியே நிலப்பகுதிகடலில் அமிழ்ந்தது.

•    அவ்வாறு நிலப்பகுதி அமிழ்ந்ததால் தான்மேற்குக் கடற்கரை உருவானது.எனவே தான் மேற்குக் கடற்கரை நேராகவும், குறுகலாகவும்காணப்படுகிறது.

No comments:

Post a Comment