இந்திய காலநிலை கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 4
1. அரபிக்கடலில் இருந்து வீசும் தென்மேற்கு பருவக்காற்றின் ஒரு பகுதி மூலம் அதிக மழைப்பொழிவைப் பெறும் இடம் சோட்டாநாகபுரி பீடபூமி
2. வங்காள விரிகுடா கிளை காற்று அரபிக்கடல் ‘கிளையுடன்’ சேர்ந்து இமயமலையின் அடிவாரமான சிவாலிக் குன்று பகுதிகளுக்கு அதிக மழைப் பொழிவைத் தருகிறது
3. வடகிழக்கு காற்று நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசுகிறது.
4. வடகிழக்கு பருவக் காற்றால் குளிர்காலத்தில் ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு நல்ல மழையைப் பெறுகின்றன
5. குளிர்காலத்தில் உயர் அழுத்தப் பகுதியிலிருந்து தென் இந்தியாவை நோக்கி வீசும் காற்றுக்கு பின்னடையும் பருவக்காற்று என்று பெயர்
6. தென் மேற்கு பருவக்காற்றின் காரணமாக நம் நாட்டில் 80 சதவீதம் மழைபொழிகிறது
7. தார் பாலைவனம் 25 செ.மீட்டருக்கும் குறைவான மழைப்பொழிவைப் பெறுகிறது
8. நீர்வளத்தை நன்முறையில் பயன்படுத்தி எதிர்காலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நிர்வகிப்பதற்கு நீர் மேலாண்மை என்று பெயர்
9. நீரை ‘மழைநீர் சேகரிப்பு’ என்ற நுட்பமுறையை பயன்படுத்தி சேமிக்கலாம்
10. தென்மேற்கு பருவக்காற்றின் மூன்றாவது பகுதி ராஜஸ்தான் நோக்கி நகர்கிறது
No comments:
Post a Comment