LATEST

Friday, January 31, 2020

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5

இந்தியா - இயற்கை வளங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5

1. சரளை மண்ணில் காப்பி, இரப்பர், முந்திரி மற்றும் மரவள்ளி முதலிய பயிர்கள் பயிரிடப்படுகின்றன
 
2. இமாச்சல் மற்றும் சிவாலிக் மலைத்தொடர்களில் காணப்படும் மண் மலைமண்
 
3. இலைச்சத்தும், சாம்பல் சத்தும் அதிகமாக உள்ள மண் மலை மண்
 
4. காரச்சத்தை பெற்ற மண் வறண்ட பாலைவன மண்
 
5. வளமில்லாத மண்ணாக வறண்ட பாலைவன மண் உள்ளது
 
6. இயற்கை மற்றும் மனிதனின் செயல்பாடுகளால் மண் நீக்கப்படுவது மண் அரிப்பு எனப்படும்
 
7. மண் அரிப்பிற்கு ஓடும் நீர், காற்று, மனித இனம் முதன்மை காரணிகளாக அமைகின்றன
 
8. மண் வளத்தைத் தக்க வைத்துக் கொள்ளுவதற்கு மனிதர்கள் எடுக்கும் முயற்சி மண்வளப்பாதுகாப்பு
 
9. பாபுல் மரங்களின் மரப்பட்டைகள் தோல் பதனிடுவதற்கு பயன்படுகின்றன
 
10. படகுகள் கட்டுவதற்கு மாங்குரோவ் காடுகளின் மரங்களை பயன்படுத்துவர்

No comments:

Post a Comment