ஏகாதிபத்தியம் - இந்தியா, சீனா
வினா-விடை பகுதி 5
1. சீனா குடியரசு நாடாக உருவாகக் காரணமாக இருந்தவர் டாக்டர் சன்யாட்சென்
2. பிரிட்டன், ரஷ்யா தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்ட நாடு பாரசீகம்
3. அமெரிக்கா ஈராக்கின் மீது ஏற்படுத்தியது இராணுவ ஏகாதிபத்தியம்
4. பொருள்களின் உற்பத்தி ஐரோப்பாவில் அதிகரிக்கக் காரணம் தொழிற்புரட்சி
5. இந்தியாவில் ஏகாதிபத்தியம் ஏற்பட காரணம் போட்டி மனப்பான்மை, ஒற்றுமையின்மை
6. ஐரோப்பாவில் அதிதீவிர நாட்டுபற்றுக் கொள்கை ஏற்பட்ட காலம் 19-ம் நூற்றாண்டின்
பிற்பகுதி
7. இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்களின் குடியேற்றங்களை
காலனி ஆதிக்கக் காலத்தில் ஏற்படுத்திய பகுதி ஆசிய அமெரிக்க கண்டங்கள்
8. ஆப்பிரிக்க, ஆசியக்கண்டங்களை அடையக் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வழித்தடங்கள் ஏகாதிபத்தியக்
கொள்கையை ஊக்குவித்தன
9. பிற்படுத்தப்பட்ட நாடுகளின் பொருளாதார வளங்களை சுரண்டும் பிரத்தியேக
உரிமை சலுகைகள் அல்லது உரிமைகள் முறை
10. ஜெர்மனி சீனாவிடம் எந்தப் பகுதிக்கான குத்தகை உரிமம் பெற்றது ஷாண்டுங்
தீபகற்பம்
No comments:
Post a Comment