ஏகாதிபத்தியம் - இந்தியா, சீனா
வினா-விடை பகுதி 6
1. பிரிட்டன் மற்றும் ரஷ்யா, பாரசீக நாட்டைத் தங்களுக்குள் பங்கீட்டுக் கொண்ட ஆண்டு 1907
2. சில ஆப்பிரிக்க இனங்களின் மறைவுக்குக் காரணமாக இருந்தது அடிமை
வியாபாரம்
3. இந்தியாவில் எந்த பகுதியில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி
வியாபாரத் தளத்தை ஏறபடுத்தியது சூரத்
4. முகலாயர்களை ஆங்கிலேயக் கப்பற்படை யாரிடம் இருந்து பாதுகாத்தது போர்ச்சுகீசியர்கள்
5. வரியில்லா வணிக முறையை உருவாக்கியவர்கள் ஆங்கிலேயர்கள்
6. பிளாசிப் போர் ஏற்படக்காரணமாக இருந்தது வரியில்லா வணிக முறை
7. வங்காளத்தை ஆளும் தனி உரிமையை கிழக்கிந்திய வணிகக்குழு எதற்குப் பின்
பெற்றது பக்சார் போருக்குப் பின்
8. காண்டன் துறைமுகத்தை ஆங்கில மற்றும் பிரெஞ்சுப் படைகள் கைப்பற்றிய
போர் இரண்டாம் அபினிப் போர்
9. சீன – ஜப்பானியப் போரில், சீனா ஜப்பானியர்களிடம் ஒப்படைத்த தீவு பார்மோசா தீவு
10. ஒரு நாட்டின் ஆட்சி மற்றொரு நாட்டின் மீது திணிக்கப்படுதல் ஏகாதிபத்தியம்
No comments:
Post a Comment