LATEST

Wednesday, January 29, 2020

ஏகாதிபத்தியம் - இந்தியா, சீனா வினா-விடை பகுதி 7

ஏகாதிபத்தியம் - இந்தியா, சீனா

வினா-விடை பகுதி  7

1. Imperium என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது ஏகாதிபத்தியம்.

2. கி.பி.1492 முதல் கி.பி.1763 வரை ஐரோப்பிய நாடுகள் பின்பற்றிய கொள்கை காலனி ஆதிக்கம்.

3. குடியேற்றங்களை அந்நிய நாட்டில் ஏற்படுத்தி அதன் இயற்கை வளங்களைச் சுரண்டுவது ஏகாதிபத்தியம்.

4. ஐரோப்பிய நாடுகள் உள்நாட்டு சந்தைகளில் தங்களின் பொருள்களை விற்க இயலாததற்குக் காரணம் தொழில் பாதுகாப்புச் சட்டம்.

5. சமநிலை ஆதிக்கம் பெற ஐரோப்பிய நாடுகள் அண்டை நாடுகளுக்கு இணையாக குடியேற்ற நாடுகளை ஏற்படுத்த முற்பட்டன.

6. மக்கள் தொகைப் பெருக்கத்தின் முக்கிய விளைவு வேலையின்மை.

7. சட்ட ஒழுங்கின்மை முதல் உலகப்போருக்கு முன் குடியேற்றங்களைக் கைப்பற்ற வழிவகுத்தது.

8. ஜெர்மனி ஷாண்டுங் தீபகற்பம் மீது குத்தகை உரிமம் பெற்றிருந்த காலம் 99 ஆண்டுகள்.

9. ஆட்டோமான் பொதுக் கடன் நிர்வாகத்தில் இருந்தவர்கள் ஐரோப்பிய அதிகாரிகள்.

10. முதல் உலகப்போருக்கு முன் துருக்கியின் பொருளாதார அமைப்புகள் எதன் கட்டுப்பாட்டில் இருந்தது ஆட்டோமான் பொதுக் கடன் நிர்வாகம்.

No comments:

Post a Comment