LATEST

Friday, January 31, 2020

தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5

தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்

கோடிட்ட இடத்தை நிரப்புக  பகுதி 5

1. பெரியார் தனது சுயமரியாதைக் கொள்கைகளை குடியரசு, புரட்சி மற்றும் விடுதலை போன்ற பத்திரிகைகளின் மூலம் பரப்பினார்.

2. ஈ.வே.இராமசாமிக்கு சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் ‘பெரியார்’ எனும் பட்டம் வழங்கப்பட்டது.

3. 1944-ல் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றப்பட்டது.

4. சி.என்.அண்ணாதுரை பிறந்த ஆண்டு 1909, செப்டம்பர் 15.

5. சி.என்.அண்ணாதுரை பிறந்த ஊர் காஞ்சிபுரம்.

6. திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் சி.என்.அண்ணாதுரை.

7. அண்ணா நீதி கட்சியின் வாயிலாக அரசியலில் நுழைந்தார்.

8. புகழ்பெற்ற பேச்சாளர்களில் ஒருவராகத் திகழந்தவர் அண்ணா.

9. இந்தி எதிர்ப்பு மாநாட்டை துவங்கியவர் பெரியார்.

10. 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, அண்ணா தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

No comments:

Post a Comment