LATEST

Friday, January 31, 2020

தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6

தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்

கோடிட்ட இடத்தை நிரப்புக  பகுதி 6

1. படி அரிசி எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா.

2. சித்திரை முதல் தேதியை தமிழ் புது வருட நாளாக அறிவித்தவர் பேரறிஞர் அண்ணா.

3. புனித ஜார்ஜ்கோட்டையில் அமைந்துள்ள செக்ரடேரியட் என்பதை தலைமைச்செயலகம் எனப்பெயர் மாற்றியவர் அண்ணா.

4. சத்யமேவ ஜெயதே என்ற அரசு குறிக்கோளை வாய்மையே வெல்லும் என அண்ணா மாற்றி அறிவித்தார். 

5. ஸ்ரீ, ஸ்ரீமதி, குமாரி போன்ற சமஸ்கிருத வார்த்தைகளுக்கு மாற்றாக அண்ணா அறிவித்த தமிழ் சொற்கள் திரு, திருமதி, செல்வி.

6. அண்ணாவைப் பாராட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்த ஆண்டு 1968.

7. பேரறிஞர் அண்ணா இயற்கை எய்திய ஆண்டு 1969, பிப்ரவரி 3.

8. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஆண்டு 1886, ஜீலை 30.

9. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த இடம் புதுக்கோட்டை.

10. புற்றுநோய் நிவாரண மருத்துமனை தொடங்கப்பட்ட ஆண்டு 1949.

No comments:

Post a Comment