LATEST

Friday, January 31, 2020

தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள் கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 7

தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்

கோடிட்ட இடத்தை நிரப்புக  பகுதி 7

1. சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தை தோற்றுவித்தவர் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி.

2. தேவதாசி முறையை ஒழிக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி.

3. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட ஆண்டு 1929.

4. நீதிக்கட்சி அரசாங்கம் தேவதாசி ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியது.

5. பூனாவில் அனைத்திந்தியப் பெண்கள் மாநாட்டை நடத்தியவர் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி.

6. டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மறைந்த ஆண்டு 1968.

7. டாக்டர் எஸ்.தர்மாம்பாள் பிறந்த இடம் கருந்தட்டான் குடி.

8. டாக்டர்.எஸ்.தர்மாம்பாள் பயின்றது சித்த மருத்துவம்.

9. டாக்டர்.எஸ்.தர்மாம்பாள் தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய சேவைகளை பாராட்டி அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் வீரத்தமிழன்னை.

10. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பிறந்த ஆண்டு 1883.

No comments:

Post a Comment