ஐரோப்பிய ஒன்றியம்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 5
1. ஐரோப்பிய பொருளியல் சமூகம் ரோம் உடன்படிக்கையின் படி ஏற்படுத்தப்பட்டது.
2. ஐரோப்பிய கூட்டமைப்பின் சட்டம் இயற்றும் அமைப்பு ஐரோப்பிய நாடாளுமன்றம்.
3. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுப்பது உறுப்பு நாடுகளின் குடிமக்கள்.
4. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் ஸ்டராஸ்பர்க்.
5. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 736 அங்கத்தினர்கள் உள்ளனர்.
6. ஐரோப்பிய நாடாளுமன்றத்தினரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
7. ஐரோப்பிய ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரிப்பது ஐரோப்பிய நாடாளுமன்றம்.
8. 2009 நவம்பர் 19 அன்று ஐரோப்பிய ஒன்றிய மன்றத்தின் முதல் நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்;
9. ஐரோப்பிய ஆணையம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகத் துறையாகச் செயல்படுகிறது.
10. ஐரோப்பிய நீதி மன்றம் லக்ஸம்பர்க் நகரில் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment