LATEST

Friday, January 31, 2020

இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6

இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ் நாட்டின் பங்கு

 கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 6


1. 1907-ஆம் ஆண்டு சுப்பிரமணிய பாரதியார் தமிழ் வாரப் பத்திரிகையான ‘இந்தியா’ பத்திரிகையின் ஆசியரானார்.

2. ‘பாலபாரதம்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையை சுப்பிரமணிய பாரதியார் வெளியிட்டார்.

3. சுப்பிரமணிய பாரதியார் கைது செய்யப்பட்ட ஆண்டு 1918, நவம்பர். 

4. செப்டம்பர் 11, 1921ஆம் ஆண்டு சுப்பிரமணிய பாரதியார் காலமானார்.

5. வாஞ்சிநாதன் பணியாற்றிய இடம் திருவிதாங்கூர் சமஸ்தானம்.

6. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளராக இருந்த ஆஷ் என்பவரை சுட்டுக் கொன்றவர் வாஞ்சிநாதன்.

7. திருப்பூர் குமரன் பிறந்த ஊர் சென்னிமலை.

8. திருப்பூர் குமரன் பிறந்த ஆண்டு 1904.

9. தமிழக வரலாற்றில் கொடிகாத்த குமரன் என்று திருப்பூர் குமரன் போற்றப்படுகிறார்

10. 1930ஆம் ஆண்டு எஸ்.சத்தியமூர்த்தி அகில இந்தியக் காங்கிரஸின் தமிழ்நாட்டுப் பிரிவின் தலைவரானார்.

No comments:

Post a Comment