LATEST

Thursday, January 9, 2020

ஆறோடு தொடர்புடைய நிலத்தோற்றங்கள்

ஆறோடு தொடர்புடைய நிலத்தோற்றங்கள்

மலைப்பாதை(The mountain course)
மலைத்தொடர் பகுதிகளில் இந்நிலை ஆரம்பாமிகறது. செங்குத்து சரிவு மற்றும் ஆற்றின் அதிக வேகம் காரணமாக செங்குத்து அரித்துத் தின்னல் செயல் இங்கு முதன்மையாக இருக்கிறது.
 
V வடிவப்பள்ளதாக்கு:
•    ஆற்றின் அரித்தெடுக்கும் செயலை எதிர்கொள்கிற திண்மையான (Rigid) பாறைகளை ஆறுகள் ஊடுருவி பிளந்து ‘V’ வடிவ பள்ளதாக்குகள் உருவாக்குகின்றன. இப்பள்ளதாக்கு மிக ஆழமான செங்குத்துச் சரிவுடன் காணப்படும். இவை "கென்யான்கள்"(Canyen) என அழைக்கப்படுகின்றன.
•    இவ்வகை பள்ளத்தாக்குகள் ஆற்றின் மேல்நிலையில் காணப்படுகின்றன. இந்நிலையில், ஆற்றலுடன் வேகமாக பாய்கிற நீரோட்டத்தைக் கொண்டிருக்கும் ஆறு, தனது பள்ளதாக்கை ஆழமாகத் தோண்டுகிறது. இப்பள்ளதாக்கு சிறியதாக இருப்பின், அது டிலையிடுக்கு (Corges) எனப்படுகிறது.

ஆற்று கவர்வு
•    இது ஆற்று கவர்வு (River Piracy) அல்லது ஆற்றின் தலைதிசை மாற்றம் எனவும் அறியப்படுகிறது. அதனுடைய வளர்ச்சி ஆற்றின் பல்வேறு வகையின் தலைத்திசை அரிப்பின் அளவை சார்ந்து மாறுபடுகிறது.

துள்ளல்கள் (Raids) பெரிய செங்குத்தான நீர்வீழ்ச்சிகள் (Cataracts) மற்றும் நீர்வீழ்ச்சிகள் (Water Falls)
•    ஆற்றின் போக்கில் மாறி மாறி அமைந்துள்ள கடின மற்றும் மென் பாறைகள் வழியே ஆற்றுநீர் ஓடி வரும்போது கடின பாறையின் மேற்பரப்பில் நீர்பட்டு குதித்து கீழே ஆற்றின் விழுகிறது. இவ்வாறறாகத்தான் துள்ளல்கள் உருவாகின்றன.
•    இந்நீர்வீழ்ச்சி சற்று பெரிய அளவில் அமையும் போது அதை பெரிய செங்குத்தான நீர்வீழ்ச்சி என அழைக்கிறோம்.
•    ஆற்றின் நீரானது பெரிய அளவில் உயரத்திலிருந்து கீழே விழுந்தால் அதை நீர்வீழ்ச்சி என்கிறோம்.

முதிர் நிலை (Mature Stage)
•    இங்கு செங்குத்து அரித்து தின்னல் செயல் நிலைமாறி பக்கவாட்டு அரித்து தின்னல் செயல் ஏற்படுகிறது. துரிதமான அரித்தல் செயலால் ‘V’ வடிவ பள்ளத்தாக்கின் கரைகள் அகலமாகின்றன.

குருட்டாறுகள் (Meanders)

•    பொதுவாக குருட்டாறுகள் என்பது ஆற்றின் வளைந்து செல்லும் பாதைகளிலுள்ள ஒரு வளைவாகும். ஆறு ஓடுவது புவி ஈர்ப்பு விசையால் பாதிக்கப்படும்.
•    ஆற்றுநீர் நேராக நீண்ட தூரத்திற்கு ஓடுவது அரிதாக இருப்பதால் வளைந்து செல்கிறது. நிலத்தின் மாறுபட்ட அமைப்புக் கேற்ப ஆறு அதன் பாதையிலிருந்து விலகி வளைந்து செல்வதால் குருட்டாறுகள் உருவாகின்றன.

ஆற்று ஓங்கல்கள்(River Cliffs)
•    ஆற்று வளைவில் ஆற்றுநீர் செல்லும் போது அது வளைவின் மேல் நேரடியாக மோதி அரித்து வன்சரிவுடைய ஆற்று ஓங்களை ஏற்படுத்துகிறது.
 
உள் அமைந்த கிளைக்குன்றுகள் (Interlocking Spurs)
•    ஆறுகள் ஓடும் போக்கில் குருட்டாற்றின் வளைவானது வெளிபுறமாக வளர்ச்சி அடைகின்றது.
•    குருட்டாற்றின் போக்கில் காணப்படும் கிளை குன்றுகளின் பக்கவாட்டு அரிப்பே இதற்கு காரணமாகும்.
 
மூப்பு நிலை (Old Stage)
•    இங்கு ஆற்றின் முக்கிய பணி படியவைத்தல், ஆற்றின் கரையை விரிவுபடுத்துதல் மற்றும் பரந்த சமவெளியை உருவாக்குவதலாகும். பல துணை ஆறுகள் முதன்மை ஆற்றில் இணைவதால் ஆற்றுநீரின் கன அளவு அதிகரிக்கின்றது.
•    ஆறானது பெரிய அளவில் பருப்பொருட்களை சமவெளி பகுதிகளில் படிய வைத்து பல்வேறு துணை ஆறுகளாகவும் பிரிந்து செல்கிறது. இதுவே பின்னிய ஆறுகள் (Braided Streams) எனப்படுகின்றன.
 
வெள்ளச் சமவெளி (Flood Plain)
•    ஆறானது மூப்பு நிலையில் அதிக அளவு படிவுகளை கொண்டிருக்கிறது. வருடாந்திர வெள்ளப்பெருக்கு ஏற்படும் பொழுது, இந்த படிவுகளானது அருகாமையில் உள்ள பகுதிகளில் பரவுகின்றன.
•    பெரும் பரப்பிலான படிவுகள் ஒவ்வொரு வெள்ளப்பெருக்கின் போதும் தொடர்ந்து படிவதால் மெதுவாக இந்த வளமான வெள்ளச் சமவெளி உருவாகிறது.
•    ஆற்றுநீர் இயல்பாக செல்லும்போது அது கொண்டு வந்த படிவுகள் மற்றும் பருப்பொருட்கள் ஆற்றின் கரையில் படிவதால் அதன் கரை உயருகிறது. இதனை லெவிஸ் (Levees) என்கிறோம்.
 
குதிரை குளம்பு ஏரி (Ox – bow - Lake)
•    ஆற்று வளைவானது ஆற்றின் மூப்பு நிலையில் அதிக அளவு துடிப்புடன் காணப்படுகிறது. அதன் வெளிப்புற கரை அல்லது உட்குழிந்த கரை துரிதமாக அரிக்கப்பட்டு அது ஒரு முழுமையான வளையம் போல மாற ஆரம்பிக்கிறது.
•    இந்நிலையில் நீரானது ஆற்று வளைவின் குறுகிய கழுத்து பகுதியை துண்டித்து புதிய வடிகாலை அமைத்துக் கொள்கிறது. அவ்வாறு துண்டிக்கப்பட்ட வளையம் ஒரு ஏரிபோல் காட்சி அளிக்கிறது. இது குதிரை குளம்பு ஏரி எனப்படுகிறது.
 
டெல்டா
ஆறு கடலை அடையும் பொழுது நுண்ணிய பருப்பொருட்கள் மேற்கொண்டு இழுத்து செல்லாமல் ஆற்றின் முகத்துவாரப்பகுதியில் விசிறி வடிவில் வண்டலை படிய வைக்கிறது. இதுவே டெல்டா என்று அழைக்கப்படுகிறது.
பல்வேறு வகைப்பட்ட டெல்டாக்கள் உள்ளன. அவைகளாவன,
1.    பறவை பாத டெல்டா (Bird Foot delta )
2.    வில் அல்லது விசிறி வடிவ டெல்டா (Arcuate or Fan Shaped Delta),
3.    பொங்குமுக டெல்டா(Estuarine Delta) மற்றும்
4.    கூரிய வடிவ டெல்டா (Cone Shaped Delta).
Extra Points:
•    வட அமெரிக்காவின் மிக நீண்ட ஆறு – மிசிசிபி, இது 3730 km
•    வட அமேரிக்காவில் உள்ள மினஷோட்டாவின் இடாஸ்கா ஏரியில் உள்ளது.
•    உலகின் 4 வது நீண்ட ஆறு.
•    உலகின் 10வது அதிக சக்தி வாய்ந்த ஆறு.

No comments:

Post a Comment