LATEST

Monday, January 13, 2020

சமூக அறிவியல் - அரேபியர், துருக்கியர் படையெடுப்பு பகுதி 1

சமூக அறிவியல்


அரேபியர், துருக்கியர் படையெடுப்பு பகுதி 1

1. முகமது-பின்-காசிம் ---------------- மீது படையெடுக்க அனுப்பப்பட்டார்
அ) சிந்து
ஆ) டெல்லி
இ) கோரி
விடை: அ) சிந்து

2. முகமது கஜினியினால் தோற்கடிக்கப்பட்ட சாஹி மரபைச் சேர்ந்த இந்து அரசர் ------------
அ) ஜெயசந்திரன்
ஆ) ஜெயபாலர்
இ) ராஜ்யபாலர்
விடை: ஆ) ஜெயபாலர்

3. முகமது கஜினி -------- ஆண்டில் சோமநாதபுரத்தின் மீது படையெடுத்தார்
அ) கி.பி.1025
ஆ) கி.பி.1027
இ) கி.பி.1001
விடை: அ) கி.பி.1025

4. முதலாம் தரெய்ன் போரில், முகமது கோரியைத் தோற்கடித்தவர் ---------- ஆவார்
அ) சபுக்டிஜின்
ஆ) கியாசுதீன்
இ) பிருதிவிராசன்
விடை: இ) பிருதிவிராசன்

5. முகமது கோரியின் படைத்தளபதி ---------- ஆவார்
அ) குத்புத்தீன் ஐபக்
ஆ) பால்பன்
இ) நசீர் உத்தீன்
விடை: அ) குத்புத்தீன் ஐபக்

6. முகமது நபி தோற்றுவித்த மதம் இஸ்லாம்.

7. முகமது-பின்-காசிம் கி.பி.712 ஆண்டில் சிந்து மீது படையெடுத்தார்.

8. இரண்டாம் தரெய்ன் போரில் முகமது கோரி, பிருதிவிராச னைக் கொன்றார்.

9. முகமது-பின்-பக்தியார் கில்ஜி கி.பி.1202-1203 ஆண்டில் நடியா பகுதியைக் கைப்பற்றினார்.

10. இந்தியாவில் துருக்கியப் பேரரசை உறுதியாக நிறுவியவர் என முகமது கோரி கருதப்படுகிறார்.

1 comment: