பேரிடர் மேலாண்மை தொடர்பான அரசு மற்றும் இதர அமைப்புகள்
• தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (National Institute of Disaster Management), பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் கீழ் நிறுவப்பட்டது.
• மனிதவள மேம்பாடு பயிற்சி, ஆராய்ச்சி, கொள்கை முடிவு தயார் செய்தல் மற்றும் ஆவணப்படுத்துதல் தொடர்பான பணிகளை மேற்கொள்வது இந்நிறுவனத்தின் பணியாகும்.
• இந்நிறுவனம் முன்னதாக தேசிய பேரிடர் மேலாண்மை மையமாக (National Centre for Disaster Management) இந்திய பொது நிர்வாக நிலையத்தின் கீழ் (Indian Institute of Public Administration) செயல்பட்டுவந்தது.
• இந்நிறுவனத்தில் துணைத் தலைவர் நிலையிலான உயர் அலுவலர் மூலம் அன்றாட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் இதன் தலைவராக உள்ளார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 42 உறுப்பினர்கள் இதன் நிர்வாகத்தில் பங்கெடுக்கின்றனர்.
• இந்நிறுவனம் 5 பிரிவுகளாக பணிகளை மேற்கொள்கிறது. அவை நிலம் சார்ந்த பிரிவு, நீர் மற்றும் காலநிலை தொடர்பான பிரிவு, கொள்கை மற்றும் திட்டமிடல் பிரிவு, பிரதிசெயல் (Response) பிரிவு, நிர்வாகம் மற்றும் நிதி பிரிவு ஆகியவை.
• பல்வேறு மாநிலங்களும் பேரிடர் ஆபத்து நிறைந்த பகுதிகளும் இந்நிறுவனத்தின் மூலம் உரிய பயிற்சிகளையும் திட்டங்களையும் பெற்று கொள்ள இயலும்.
• மாநில அளவில் வருவாய் துறையின் கீழ், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பேரிடர் தொடர்பான திட்டமிடல், நிவாரணம் மற்றும் மேலாண்மை பணிகளை மேற்கொள்கிறது.
• மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை மையம் செயல்பட்டு வருகின்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் பல துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து நிவாரணம் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
• உள்ளூர் அளவில், பேரிடர் காலங்களில், உள்ளாட்சி நிர்வாகம் அதன் நிர்வாக பகுதிகளில் நிவாரணம் மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்கிறது.
• தேசிய அளவில் இந்தியாவில் அவசரநிலை நிர்வகித்தலின் பங்கு இந்தியாவின் தேசிய பேரழிவு நிர்வகித்தல் ஆணையத்தின் கீழ் இருக்கிறது. இது உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்பு.
• அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தினுள் இயங்கும் அமைப்பான சர்வே ஆஃப் இந்தியாவும் அவசரநிலை நிர்வகித்தல் செயல்பாட்டுக்கு புவியியல் வல்லுநர்களின் தர்க்க ரீதியான அறிவு மற்றும் ஆய்வு நுண்திறமை ஆகியவற்றைக் கொடுப்பதன் மூலமாக இந்தத் துறையில் அங்கம் வகிக்கிறது.
• பொது/தனியார் கூட்டாக அவசரநிலை நிர்வகித்தல் மற்றும் ஆய்வு நிறுவனத்தை (EMRI) அண்மையில் அரசாங்கம் அமைத்திருக்கிறது.
• இது பேரழிவுகளாக விவரிக்கப்பட்ட நிகழ்வுகளில் அவசர நிலைகளுக்கு ஏற்ப சமூகங்களின் பொதுவான பிரதிசெயலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
• சில குழுக்களின் முந்தைய முயற்சிகள், முதல் பிரதிசெயல்புரிபவர்களுக்கான (இந்தியாவின் முதல்) அவசர நிலை நிர்வகித்தல் பயிற்சியினை முன்னேற்பாடு செய்தல், ஒற்றை அவசரநிலைத் தொலைபேசி எண்ணை உருவாக்குதல் மற்றும் EMS, பணியாளர், உபகரணம் மற்றும் பயிற்சி ஆகியவற்றுக்கான தரங்களை நிறுவுதல் ஆகியன உள்ளடக்கியதாக இருக்கின்றன.
• தற்போது இது ஆந்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, தமிழ்நாடு, ராஜஸ்தான், கர்நாடகா, அஸ்ஸாம், மேகாலயா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற இந்திய மாநிலங்களில் இயங்குகிறது.
• இலவச தொலைபேசி எண் 108 இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

No comments:
Post a Comment