LATEST

Wednesday, January 29, 2020

பேரிடர் மேலாண்மை

பேரிடர் மேலாண்மை

•    அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் வேகத்திற்கு இணையாக பேரிடர்களும் வளர்ந்து கொண்டே வருகின்றன.  இத்தகைய பேரிடர்களுக்கிடையே தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளும் அவசியம் மனித இனத்திற்கு ஏற்பட்டுள்ளது.
•    பேரிடர்கள் இயற்கையாகவும், மனிதனாலும் உருவாகின்றன.
•    நிலநடுக்கம், நிலச்சரிவு, புயல், வெள்ளம், காட்டுத்தீ தொடர்பான பேரிடர்கள் இயற்கையாக உருவாகின்றன. 
•    வேதியியல், அணு மற்றும் உயிரியல் தொடர்பான பேரிடர்கள் மனிதர்களால் ஏற்படுகின்றன.
•    அனைத்து வகையான பேரிடர்களும் திடீரென வருவதால் அதன் மூலம் உருவாகும் பொருள் மற்றும் உயிரிழப்புகள் மிக அதிகம்.
•    வறட்சி போன்ற மெதுவாக நிகழக்கூடிய பேரிடர்கள் தவிர பிற பேரிடர்களை முன்கூட்டி அறிவது மிக கடினம்.
 
பேரிடர் மேலாண்மை
•    அடிக்கடி நிகழும் பேரிடர்களில் இருந்து நம்மை காக்க பேரிடர் மேலாண்மை அவசியம்.  இது ஒரு கூட்டு முயற்சி.
•    பேரிடருக்கு முன், பேரிடர் தருணம் மற்றும் பேரிடருக்கு பின் என பேரிடர் மேலாண்மையை மூன்று கட்டங்களாக அணுகலாம்.
•    பேரிடர் மேலாண்மையில், பேரிடரை தடுத்தல், தயார் நிலையில் இருத்தல், துயர் துடைத்தல் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகின்றன.
•    பேரிடருக்கு முன்பாக எத்தகைய பேரிடரையும் எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருப்பதற்கு விழிப்புணர்வும், தயார்நிலையும் அவசியம் (Emergency Prepared-ness).
•    இந்த தயார்நிலை பேரிடரின் தன்மை, நிகழுமிடம், காலம் ஆகியவற்றைப் பொருத்தது.
•    தயார்நிலையின் முக்கிய குறிக்கோள் பேரிடரினால் ஏற்படும் சேதாரத்தினை முடிந்த வரையில் குறைப்பதே.

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 (Disaster Management Act 2005)
•    இச்சட்டம் இந்தியா முழுமைக்கும் பொருந்தும். இந்திய நாடாளுமன்றத்தில் இச்சட்டம் 23.12.2005ல் இயற்றப்பட்டது.
•    இச்சட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆணையம் (District Authority), உள்ளூர் ஆணையம் (Local Authority), மாநில ஆணையம் மற்றும் இந்திய அளவில் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகிய அமைப்புகளின் பணிகள், அதிகாரங்கள் ஆகியவற்றை வரையறுத்துள்ளது.
•    தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் ஆகியவையும் இச்சட்டத்தின் கீழ் தயார் செய்யப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன.
•    பேரிடருக்கான நிவாரணத்தின் வகை, தரம் அவை வழங்கப்படும் அளவு ஆகியவையும் இச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment