LATEST

Wednesday, January 29, 2020

மக்கள் தொகை பரவல் மற்றும் அடர்த்தி

மக்கள் தொகை பரவல் மற்றும் அடர்த்தி

•    புவியின் மக்கள் பரவிக் காணப்படும் நிலையினையே மக்கள்தொகை பரவல் என்கிறோம். உலகில், மக்கள் தொகை பரவல் ஒரே சீராக காணப்படுவதில்லை. புவியில் 90% மக்கள் 10% நிலப்பரப்பிலே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். 
•    ஒரு சதுர கிலோ மீட்டருக்குள் வாழும் மக்களின் எண்ணிக்கையே மக்கள் தொகை அடர்த்தி (Population Density) எனப்படுகிறது. இதனை, ஒரு நாட்டின் மக்களின் எண்ணிக்கையை அந்நாட்டின் பரப்பளவினால் வகுத்து கணக்கிடுவதால் மூலம் அறியலாம்.
•    மொனாகோ எனப்படும் மிகச் சிறிய நாட்டின் மக்கள் அடர்த்தி, ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 16,779 மக்கள் ஆகும். மொனாகோ மிகச்சிறிய நாடாக (1.95 சதுர கி.மீ) இருப்பதால், அதன் மக்கள் அடர்த்தி மிகவும் அதிகமாகும்.
•    பெரிய நாடுகளில் மக்கள்தொகை அடர்த்தி மிக அதிக உள்ள நாடு வங்காள தேசமாகும். இங்கு 1 சதுர கிலோ மீட்டருக்கு 1,069 மக்கள் வாழ்கின்றனர்.
•    உலகில் மக்கள் அடர்த்தி மிகக் குறைவாக உள்ள நாடு மங்கோலியா ஆகும். இங்கு சதுர கிலோ மீட்டருக்கு 2.9 மக்கள் தொகை கொண்டு இரண்டாம் நிலையில் உள்ளது.

No comments:

Post a Comment