LATEST

Wednesday, January 29, 2020

மக்கள் தொகை வளர்ச்சி

மக்கள் தொகை வளர்ச்சி

•    உலக மக்கள் தொகை 1650 ஆம் ஆண்டு சுமார் 500 மில்லியனை எட்டியது. அப்பொழுது முதல் மக்கள் தொகை வேகமாக வளர்ச்சியடைய தொடங்கியது. உலக மக்கள் தொகை முதன்முதலில் 1804 ஆம் ஆண்டு ஒரு மில்லியனை எட்டியது. 1927 ஆம் ஆண்டு இரண்டு பில்லியனாக 123 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரித்தது. 1950 ஆம் ஆண்டு முதல் மக்கள் தொகை வளர்ச்சிக் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது.

வருடம்   =  உலக மக்கள் தொகை (பில்லியன்கள்) =   அடுத்த பில்லியன் மக்கள் தொகை அதிகரிக்க எடுத்துக் கொண்ட காலம்
1804  =  1  =  123
1927  =  2  =  33
1960  =  3  =   14
1974  =  4  =  14
1987  =  5  =  13
1999  =  6  =  12
2011  =  7  =  12

•    மக்கள் தொகை வளர்ச்சி அல்லது இயற்கையாக ஏற்படும் மக்கள் தொகை அதிகரிப்பானது பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதத்தினை பொறுத்தே அமையும். பிறப்பு விகிதம் (Birth Rate) என்பது மொத்த மக்கள் தொகையில் 1000 மக்களுக்கு ஒரு ஆண்டில் பிறக்கும் மக்களின் எண்ணிக்கையாகும். இறப்பு விகிதம் (Death Rate) என்பது மொத்த மக்கள் தொகையில் 1000 மக்கள் தொகையில் ஒரு ஆண்டில் ஏற்படும் இறப்பின் எண்ணிக்கை ஆகும்.
•    வெவ்வேறு நாடுகள் மக்கள்தொகை மாற்றித்தில் வெவ்வேறு நிலையில் உள்ளது. தற்பொழுது, உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளின் பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.
•    வளர்ந்துவரும் நாடுகளின் இறப்பு விகிதம் குறைவாகவும், பிறப்பு விகிதம் அதிகமாகவும் இருப்பதால் அதிக மக்கள்தொகை காணப்படுகிறது. எனவே, அந்நாடுகள் வளர்ந்துவரும் மக்கள்தொகையை கட்டுப்படுத்த பிறப்பு விகிதத்தினைக் கட்டுப்படுத்தும் முயற்சியினை மேற்கொண்டு வருகிறது.
•    இன்று, உலகில் சில நாடுகளில் பிறப்புகளைவிட இறப்புகள் அதிகமாகவும் அல்லது பிறப்புகள் மற்றும் இறப்புகள் சமமாக இருப்பதாலும், மக்கள்தொகை வளர்ச்சி சுழியாமாகவோ அல்லது மக்கள் தொகை வளர்ச்சியில் எதிர்மறை நிலையிலோ உள்ளது.

No comments:

Post a Comment