LATEST

Saturday, January 11, 2020

புவி மேற்பரப்பு - அலைகள், கடல் அரிப்புடன் தொடர்புடைய நிலத் தோற்றங்கள்

அலைகள்,
கடல் அரிப்புடன் தொடர்புடைய நிலத் தோற்றங்கள்

அலைகள்
•    கடற்கரை பகுதியில் காணப்படும் அரிப்பிற்கு முக்கிய காரணி அலைகள் ஆகும். அலைகள் கடற்கரையை சுற்றிலும் அரித்தல், கடத்துதல் மற்றும் படியவைத்தல் ஆகிய பணிகளை செய்கின்றன. 
கடல் அரிப்பானது கீழ்கண்ட வழிகளில் நடைபெறுகிறது.
அரித்து தின்னல்: 
•    அலையின் விசையோடு சேர்ந்த பாறைத்துகள் ஓங்கல் மீது மோதி உடைத்து துகள்களாகப்பட்டு திரும்புகிறது.
மோதி உடைத்தல்: 
•    அலைகள் அரிக்கப்பட்ட பொருட்களை கடத்தும் போது அவைகள் ஒன்றுடன் ஒன்று மோதி மேலும் சிறிய துகள்களாக உடைகின்றன.
நீர் தாக்க செயல்: 
•     அலைகள் கடற்கரைக்கு எதிராக மோதும் போது நீரானது பாறைகளின் விரிசல்களல் உள்ளே நுழைகிறது. இதனால் உள்ளேயுள்ள காற்று அழுத்தப்பட்டு இறுக்கமடைகிறது. 
•    அலைகள் பின்வாங்குகின்ற போது உள்ளே இருந்த காற்றானது அதிக விசையுடனும் மற்றும் பெரும் ஒலியுடனும் விரிவடைகின்றன.
கரைத்தல் செயல்: 
•    கரைத்தல் செயல் மூலம் பாறைகளில் இராசாயண மாற்றம் ஏற்படுத்தப்பட்டு சிதைவடைகின்றன.

கடல் அரிப்புடன் தொடர்புடைய நிலத் தோற்றங்கள்
வளைகுடாக்கள் (Bay)
•    கடற்கரையின் வெளிப்புறத்தின் மேல் தொடர்ச்சியான அலைகளானது மோதுவாகின்ற போது பாறைகளின் கடினத் தன்மைக்கு ஏற்ப கடற்கரை பகுதியானது அரிக்கப்பட்டு ஒழுங்கற்று காணப்படுகிறது.
•    மாறி மாறி காணப்படுகின்ற கிரானைட், சுண்ணாம்புகல், மண் மற்றும் சேறு ஆகியவை ஒன்றிணைந்து காணப்படும் இடத்தில் இவை அதிகமாக காணப்படுகின்றன.
ஓதங்கள்(Cliffs)
•    பொதுவாக, செங்குத்தான பாறை கடலை நோக்கி அமையும் போது ஓங்கல் ஏற்படுகின்றது.
குகை (Caves)
•    தொடர்ச்சியான அலைகளானது ஓங்கலின் அடிமட்டத்தில் குடைந்து குகை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
கடல் வளைவு (Arch)
•    இரண்டு குகைகள் ஒன்றோடு ஒன்று சேரும் போது கடல் வளைவு உருவாகின்றன. மேலும் அலைகளால் ஏற்படுகின்ற தொடர் அரிப்பானது கடல் வளைவு முழுவதுமாக நொறுங்கி போக வழிவகுக்கிறது.
கடல்தூண் (Stack)
•    எஞ்சி இருக்கின்ற பாறைத் தோற்றமானது தூணைப் போல் இருப்பதால் அவற்றை கடல் தூண் என்கிறோம்.
எஞ்சிய பாறை (Stump)
•    தொடர்ந்து கடல் தூண்கள் அரிக்கப்படுவதனால் எஞ்சிய பாறை உருவாகின்றன. அவை கடல் மட்டத்திலிருந்து சற்றே பார்க்கக் கூடியதாக இருக்கும்.

No comments:

Post a Comment