LATEST

Friday, January 10, 2020

சமூக அறிவியல் - சுழன்றும் சுற்றியும் வரும் பூமி

சமூக அறிவியல்


சுழன்றும் சுற்றியும் வரும் பூமி

1. பூமியின் அச்சு ------------ டிகிரி சாய்ந்துள்ளது
அ) 23 ½ டிகிரி
ஆ) 66 ½ டிகிரி
இ) 90 டிகிரி
விடை: அ) 23 ½ டிகிரி

2. பூமி தன்னைத்தானே சுற்றுவதால் ஏற்படும விளைவு -------------------
அ) பருவகால மாற்றம்
ஆ) இரவு பகல் மாற்றம்
இ) வடதென் ஓட்டம்
விடை: ஆ) இரவு பகல் மாற்றம்

3. லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் உள்ள நாள்கள் ---------------------
அ) 28
ஆ) 29
இ) 27
விடை: ஆ) 29

4. பூமி --------------- சுற்றிக் கொள்வதை தற்சுழற்சி என்கிறோம்
அ) சூரியனை
ஆ) நீள்வட்ட பாதையில்
இ) தன்னைத்தானே
ஈ) இரவு பகலாகச்
விடை: இ) தன்னைத்தானே

5. இரவு பகல் சமமான நாட்கள் ------------------
அ) மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23
ஆ) ஜீன் 1 மற்றும் டிசம்பர் 1
இ) ஏப்ரல் 15 மற்றும் அக்டோபர் 14
ஈ) ஜனவரி 18 மற்றும் ஜீன் 20
விடை: அ) மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23

6. வட கோளம் குளிர்காலமாக இருக்கும் போது தென்கோளம் ----------- இருக்கும்
அ) கோடைக்காலமாக
ஆ) வசந்தகாலமாக
இ) இலையுதிர்க்காலமாக
ஈ) மழைக்காலமாக
விடை: அ) கோடைக்காலமாக

7. பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் கால இடைவெளியைத்தான் ஓர் -------------- என்கிறோம்
அ) ஆண்டு
ஆ) நாழி
இ) மாதம்
ஈ) யுகம்
விடை: அ) ஆண்டு

8. பூமியின் வடதுருவத்தையும் தென் துருவத்தையும் இணைக்கும் ------------ கோடு பூமியின் அச்சு எனப்படும்
அ) உண்மையானக்
ஆ) மெல்லியக்
இ) கற்பனைக்
ஈ) தடித்துக்
விடை: இ) கற்பனைக்

9. லீப் வருடம் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்.

10. பூமியின் தற்சுழற்சி காரணமாக பகல் இரவு மாற்றம் நிகழ்கிறது.

No comments:

Post a Comment