நிலநடுக்கம்
• பூமிக்கடியில் அதிகப்படியான அழுத்தத்தினால் சக்தி வெளியேற்றப்பட்டு தளதட்டுகள் (Tectonic Plates) நகர்வதால் ஏற்படும் அதிர்வே நிலநடுக்கம் (அ) பூகம்பம்.
• இந்த அதிர்வின் அளவை நிலநடுக்க மானியினால் (Seismograph) ரிக்டர் அளவு மூலம் அளவிடலாம்.
• பொதுவாக ரிக்டர் அளவுகோலில் 3க்கும் கீழ் உள்ளவை உணரப்படுவதில்லை.7 ரிக்டருக்கும் கூடுதலாக அளவுள்ள நில நடுக்கங்கள் நிகழும் இடத்தை பொருத்து பலத்த சேதத்தை ஏற்படுத்தும்.

தள தட்டுகள் (Tectonic Plates)
• பூமியின் மேற்பரப்பு (Lithosphere) நகரும் வகையிலான 7 பெரிய தட்டுகளாகவும், சுமார் 12 சிறிய தட்டுகளாகவும் சூழ்ந்துள்ளன.
• 5 கண்டங்களும் (ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்த்திரேலியா, ஆப்பிரிக்கா) பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங் கடல் ஆகிய பெருங்கடல்களும் 7 பெரும் தட்டுகளில் அடங்கும்.
• இந்த தட்டுகள் 80 கி.மீ. வரை தடிமன் கொண்டிருக்கும்.
• இத்தட்டுகளின் அடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருக்கும். பூமியின் சுழற்சி, பாறைக் குழம்பு நகர்வு ஆகியவற்றினால் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதும் நகர்வதும் நிகழ்கின்றன.
• ஏறத்தாழ ஆண்டொன்றுக்கு 1 முதல் 13 செ.மீ. வரை இத்தட்டுகள் நகர்கின்றன.
• ஐரோப்பாவும் ஆசியாவும் இணைந்து காணப்பட்டாலும், இவை தனித்தனி தட்டுகளில் அமைந்துள்ளன. இந்தியா மற்றும் தெற்கு ஆசியா பகுதிகள் தனி தட்டாக அமைந்துள்ளது.

நிலநடுக்கப் பகுதிகள்
• இந்திய துணைக் கண்டம் ஐந்து நிலநடுக்கப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை முறையே ஒன்று முதல் ஐந்து வரை எண்களால் குறிப்பிடப்படுகிறது.
• பகுதி 1 (Zone – 1) குறைந்த அளவு பாதிப்புக்குள்ளாகும் பகுதி.
• பகுதி 2 (Zone – 2) குறைந்தது முதல் மிதமானது வரை பாதிப்புக்குள்ளாகும் பகுதி தமிழ்நாடு, ராஜஸ்தான், மேற்கு வங்காளத்தின் சில பகுதிகள் ஆகியவை இதில் அடங்கும்.
• பகுதி 3 (Zone – 3) மிதமான பாதிப்புக்குள்ளாகும் பகுதி மேற்கு கடற்கரையில் சில பகுதிகள், கங்கை சமவெளி பிரதேசம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகியவற்றின் சில பகுதிகள், பஞ்சாப், ஹரியானா, ஜார்கண்ட், மேற்கு வங்காளம் ஆகியவற்றின் சில பகுதிகள்.
• பகுதி 4 (Zone – 4) அதிகமான பாதிப்புக்குள்ளாகும் பகுதி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, மஹாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் சில பகுதிகள் இதில் அடங்கும்.
• பகுதி 5 (Zone – 5) மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதி வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து முழுவதும், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளும் அந்தமான் நிக்கோபர் தீவுகளும் மிக அதிகமான பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment