நில நடுக்கப் பகுதியில் செய்யக்கூடியவை
நில நடுக்கப் பகுதியில் செய்யக்கூடியவை
• கட்டிடங்களில் உள்ள விரிசல்கள் சரிசெய்யப்படவேண்டும்.
• மின்விளக்குகள் மேற்கூரையுடன் நன்கு இணைக்கப்பட வேண்டும்.
• உரிய கட்டிட விதி முறைகளை (BIS Code) பின்பற்ற வேண்டும்.
• பெரிய, கனமான பொருட்கள் கீழ்தளத்திலும், கீழ்அலமாரியிலும் வைக்க வேண்டும்.
• கனமான தொங்கும் படங்கள், கண்ணாடிகள் போன்றவற்றை படுக்கை மற்றும் இருக்கையிலிருந்து தள்ளி வைக்க வேண்டும்.
• பழுதடைந்த மின்சாதனங்கள், மின்கம்பங்கள், கனமான எரிவாயு குழாய்கள் செப்பனிடப்பட வேண்டும்.
• வீட்டிற்குள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பான இடமாக தெரிவு செய்து வைக்க வேண்டும். வீட்டிற்குள் வலிமையான கட்டிலின் கீழ்பகுதி, உணவு மேசையின் கீழ்பகுதி, வீட்டின் வெளியே திறந்த வெளி ஆகியவை சில பாதுகாப்பான இடங்களாகும்.
• அவசர தொலைபேசி எண்கள் (காவல், மருத்துவமனை, தீயணைப்பு, உள்ளூர் நிர்வாகம் ஆகியவை) நினைவில் வைத்திருக்கலாம்.
• பேட்டரியுடன் டார்ச் லைட், கூடுதல் பேட்டரிகள், முதலுதவி சாதனங்கள், வழிகாட்டி நெறிமுறைகள், உலர்ந்த நிலையில் உள்ள அவசர கால உணவுகள், சிறிய கத்தி, குளோரின் மாத்திரைகள், அவசியமான மருந்துகள், பணம் மற்றும் கடன் அட்டைகள், ஆகியவை அடங்கிய அவசரகால உதவி பெட்டியை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அவசர கால தகவல் தொடர்பு திட்டம்
• குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் வெவ்வேறு இடங்களில் பணியிலோ வசிப்பிடத்திலோ இருப்பின் அவர்களுடன் தொடர்பு கொள்ள ஒரு பொதுவான தொலைவில் உள்ள உறவினர் அல்லது நண்பரின் பெயர், தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை தயார் நிலையில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
• குடியிருப்பு பகுதிகளில் நிலநடுக்கத்தின்போது செய்ய வேண்டிய பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
• நிலநடுக்கத்தை தாங்கக்கூடிய கட்டிட முறைகள் அவசர காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் குறித்து அனைவருக்கும் தெரிவிக்கலாம்.
• நிலநடுக்கம் ஏற்படும் தருணத்தில் நீங்கள் கட்டிடத்திற்கு உள்ளே இருந்தால் வலிமையான மேஜையின் கீழோ அல்லது கட்டிலின் கீழோ படுத்து நிலநடுக்கம் நிற்கும் வரையில் அசையாமல் இருக்கலாம்.
• கண்ணாடி ஜன்னல், கண்ணாடியாலான பொருட்கள் அருகே நிற்கக்கூடாது. தலை மற்றும் முகப்பகுதிகளை தலையணை கொண்டோ, மெத்தையைக் கொண்டோ மூடிக் கொள்ளலாம்.
• நிலநடுக்கத்தின் போது இங்கும் அங்கும் ஓடாமல் பாதுகாப்பு கருதி ஓரிடத்தில் இருப்பது சரியானது. மின்உயர்த்தி (Lift), நகரும் படிகட்டுகள் (Escalator) ஆகியவற்றை உபயோகப்படுத்தக்கூடாது.
• நிலநடுக்கச் சமயத்தில் மின் தடை ஏற்படுவதும், தீக்கான அலாரம் அடிப்பதும் மற்ற தானியங்கி தீ தடுப்பு உபகரணங்கள் இயங்குவதும் நிகழலாம்.
• நிலநடுக்கத்தின் போது கட்டிடத்திற்கு வெளியே இருந்தால் மரங்கள், தெருவிளக்குகள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றிலிருந்து தூரமாக ஒதுங்கி நிற்கவேண்டும்.
• பறந்து வரக்கூடிய பொருட்களிலிருந்து தற்காத்து கொள்வதற்காக தலை, முகம் மற்றும் உடற்பகுதிகளை மூடிக்கொள்வது நல்லது.
• நிலநடுக்கத்தின் போது வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தால், உடனடியாக வண்டியை அணைத்து நிறுத்தி விட்டு வண்டிக்குள்ளேயே இருக்க வேண்டும். வண்டியை நிறுத்தும் போது பாலம், கட்டிடங்கள், மரங்கள், மின்வயர்கள் அருகில் நிறுத்தக் கூடாது.
• வண்டியை தொடர்ந்து செலுத்தும் போது எச்சரிக்கையுடன் மெதுவாக செலுத்த வேண்டும். ஏனெனில் எதிர்பாராத விரிசல்கள் சாலைகளில் ஏற்பட்டிருக்கலாம்.

No comments:
Post a Comment