LATEST

Wednesday, January 29, 2020

பேரிடர் மேலாண்மை - நிலநடுக்கத்திற்கு பிறகு செய்ய வேண்டியவை

நிலநடுக்கத்திற்கு பிறகு செய்ய வேண்டியவை

•    அமைதியாக இருந்து, தொலைக்காட்சி, வானொலி மூலம் வழங்கப்படும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.
•    பெரும் அலைகள் வருவதற்கான வாய்ப்பிருப்பதால், கடற்கரை பகுதியிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
•    தண்ணீர் குழாய், எரிவாயு, மின் இணைப்புகளை நிறுத்த வேண்டும்.
•    தீக்குச்சி, சிகரெட், மின்விளக்கு போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.  டார்ச் பயன்படுத்த வேண்டும்.
•    தீ விபத்து ஏற்பட்டால், தீயை அணைக்க முயற்சி செய்ய வேண்டும் அல்லது தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.
•    உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற வேண்டும்.  காயம் பட்டவர்களை அசைக்காமல் முடிந்த அளவு முதலுதவி அளிக்க வேண்டும்.
•    எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அகற்ற வேண்டும்.
•    மண்ணில் புதையுண்ட நபர்களை காப்பாற்ற உடனடியாக நிவாரணக் குழுவிடம் தகவல் அளிக்க வேண்டும்.
•    அறுந்து விழுந்த மின்கம்பிகளை தொடாமலும் அருகில் உள்ள மற்ற பொருட்களை தொடாமலும் இருக்க வேண்டும்.
•    திறந்த நிலையில் உள்ள நீர் நிலைகளிலிருந்து தண்ணீர் அருந்தக் கூடாது.  சுத்தமான துணியின் மூலம் வடிகட்டி தண்ணீர் குடிக்க வேண்டும்.
உங்கள் குடியிருப்பு மோசமான நிலையில் இடிந்திருந்தால் அதிலிருந்து வெளியேறி விட வேண்டும்.  தண்ணீர் பாத்திரங்கள், உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
•    இடிந்துள்ள கட்டடங்கள் அருகிலோ உள்ளேயோ செல்லக் கூடாது.
•    பேரிடரின்றி மனிதவாழ்வு சாத்தியமில்லை.  எத்தகைய பேரிடரையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது மட்டுமே பேரிடர் மேலாண்மையின் முக்கிய நோக்கம்.  தெரிந்த பேரிடர்கள் மட்டுமின்றி கற்பனைக்கு எட்டாத பேரிடர்களையும் எதிர்கொள்ளும் வகையில் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.  உயிரிழப்பு, பொருளிழப்பு, தவிர்க்க இயலாதது என்ற போதிலும் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இவ்வகை இழப்புகளை பெருமளவில் குறைக்கும்.  வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு முற்றிலும் எதிராக செயல்படாமல் இயற்கையுடன் சார்ந்த வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது மட்டுமே இன்றைய சந்ததி மட்டுமின்றி வருங்கால தலைமுறைகளையும் வாழ வைக்கும்.

No comments:

Post a Comment