பனியாறுகளோடு தொடர்புடைய நிலத் தோற்றங்கள்
சர்க் (Cirque)
• பனியாறுகள் பறித்தெடுத்தல் செயலினால் உருவாகும் நாற்காலி போன்ற பெரும் பள்ளமே சர்க் ஆகும். சர்குகளிலுள்ள பனிகட்டி உருகிய பின்னர் அந்த இடத்தை ஒரு சிறிய ஏரி ஆக்கிரமித்துக் கொள்கிறது. இந்த ஏரியை "டார்ன்" (Tarn) ஏரி என்கிறோம்.

அரெட்டுகள் (Aretes) மற்றும் பிரமிடு சிகரங்கள் (Peaks)
• இரண்டு சர்க்குகளுக்கு இடையே காணப்படும் கத்தி போன்ற நீண்ட தொடர் நிலப்பகுதியே அரெட்டு ஆகும்.
• அருகருகே உள்ள இரண்டுக்கும் மேற்பட்ட சர்க்குகளால் இணைக்கப்பட்டுள்ள பகுதி உடைந்து நிற்கும் சிகரம் போன்ற அமைப்பே பிரமிடு சிகரமாகும்.

‘U’ வடிவ பள்ளதாக்கு
• பள்ளத்தாக்கானது பனியாற்றினால் அரிக்கப்பட்டு ஆழப்படுத்தப்படுவதால் உருவாகும். நிலத்தோற்றமே ‘U’ வடிவ பள்ளதாக்கு ஆகும்.
• இவை, ஆற்றினால் உருவாக்கப்பட்டிருக்கும் 'V’ வடிவ பள்ளத்தாக்கானது பனியாற்றினால் ஆழப்படுத்தப்பட்டு அகலப்படுத்தப்படுவதினால் உருவாகின்றது.

தொங்கும் பள்ளதாக்கு (Hanging Valley)• முதன்மை கண்டப் பனியாறு, துணைப்பனியாற்றின் விட அதிக அளவு அரிப்புத்திறன் கொண்டிருக்கும் போது தொங்கும் பள்ளதாக்கு உருவாகின்து. • துணை ஆற்றில் உள்ள பனி உருகிய பின்பு அது முதன்மையாற்றின் மீது தொங்கிக் கொண்டிருப்பது போல் காட்சியளிக்கும். இவ்வாறாண துணை ஆறு தொங்கும் பள்ளதாக்கு என அழைக்கப்படுகின்றது.• பனியாறுகளினால் உருவாக்கப்படும் மற்ற நிலத்தோற்றங்களாவன, செம்மறி ஆட்டுப்பாறை (Rocke moutonnee) வால் வடிவப் பாறை (Crag & tail) பொருந்தாப்பாறை அல்லது திரியும் பாறை (Boulder Clay) எராடிக்கள்(Erractics).
படிவு நிலத்தோற்றங்கள்
மொரைன்கள்• மொரைன்கள் எனப்படுபவை பாறைத்துகள்கள், துண்டுகள், பாறை, உருண்டைகள் மற்றும் சேறுகளால் ஆனவை. மேலும் அவைகள் விளிம்பு மொரைன்கள் (Terminal Moraines) பக்கமொரைன்கள் (Lateral Moraines) மற்றும் மத்திய மொரைன்கள் (Media Moraines) என பிரிக்கப்படுகின்றன.

டிரம்லின்கள் (Drumlins)
• பாறைத்துகள் மற்றும் சேறு கலவையாலான நிலத்தோற்றமே; டிரம்லின்கள் ஆகும். இவைகள் பார்ப்பதற்கு முட்டைகள் புதைந்துள்ளது போல் தோற்றமளிக்கும்.
• வண்டல் சமவெளி மற்றும் எஸ்கர்கள் ஆகியன இதர படிவித்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் ஆகும்.

No comments:
Post a Comment