LATEST

Saturday, January 11, 2020

புவி மேற்பரப்பு - காற்று

காற்று

 காற்று
•    காற்றானது பாலை மற்றும் அரைப் பாலைவனங்களால் தேயுறுதலை ஏற்படுத்துவதில் வலிமையான காரணியாகும். ஏனெனில் குறைந்த அளவு மழைப்பொழிவு மற்றும் சொற்ப அளவு இயற்கைத் தாவரங்கள் இருப்பதே காரணமாகும்.
 
அரித்தலின் செயல்பாடுகள்
அரித்தலின் செயல்பாடுகள் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்படுகிறது.
அவைகளாவன,
 
• புடைத்தெடுத்தல்: உதிரியான மணல் துகள்கள் அவை இருக்கும் இடத்திலிருந்து காற்றினால் தூக்கி செல்லப்படும் செயலே புடைத்தெடுத்தலாகும்.
 
• அரித்து தின்னல்: பாறைத் துகள்களானது காற்றினால் எடுத்து செல்லப்பட்டு எதிரிலுள்ள பாறைகளின் மீது மோதி சிதைப்பதே அரித்து தின்னலாகும்.
 
•    மோதி உடைதல்: காற்றினால் கடத்தப்படும் பாறைத்துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதைவடைவது மோதி உடைதலாகும்.
 
கடத்தல் செயல்முறைகள்
கடத்தல் செயலானது பின்வரும் நிகழ்வுகள் மூலம் நடைபெறுகிறது. அவைகளாவன, தாவுதல் (Slatation) மற்றும் தொங்குதல் (Suspension) ஆகும்.

காற்று அரிப்புடன் தொடர்புடைய நிலத்தோற்றங்கள்

காற்றானது புடைத்தெடுத்தல் (Deflation) மற்றும் அரித்து தின்னல் (Abration) ஆகிய செயல்கள் மூலம் பல்வேறு வகையான நிலத்தோற்றங்களை குறிப்பாக பாலைவனப் பகுதிகளில் உருவாக்குகின்றது.
அவைகளாவன,
 
பீடப்பாறைகள் (Pedestal Rock)அல்லது காளான் பாறைகள் (Mushroom Rock)
•    கடின மற்றும் மென்மையான அடுக்குகளால் ஆன பாறையானது காற்றினால் கடத்தி கொண்டு வரப்படும் மணல்துகள்களினால் தாக்கப்படுகின்றது. 
•    அப்போது மென் அடுக்குகளானது கீழ் பகுதியில் இருப்பின் மேலே உள்ள கடின அடுக்கினைவிட வேகமாக அரிக்கப்படுகிறது. இவ்வாறான நீண்டகால அரிப்பினால் பாறைத்தூணானாது காளான் போன்று தோற்றமளிக்கிறது. இவ்வாறான பாறைகள் பீடப்பாறைகள் எனவும் அழைக்கப்படுகிறது.
 
சூகன் (Zeugen):
•    மென்பாறை அடுக்கின் மேல் தட்டையான கடினப்பாறை அடுக்குகள் கிடையாக அமைந்திருந்தால் அவை காற்றினால் குறுக்காக அரிக்கப்பட்டு நீண்ட, குன்று தோன்றுகிறது.
•    இந்த கடினப்பாறையின் தோற்றம் மேடை போன்று காட்சியளிக்கும். அதன் உச்சி சூகன் எனப்படும்.
 
யார்டாங் (Yardang)
•    பாலைவனச் சூழலில் காற்றினால் அரிக்கப்பட்டு நீண்ட மலைத்தொடர் போல காணப்படும் நிலத்தோற்றமே யார்டாங் ஆகும்.
•    யார்டாங்குகள் அகன்ற நீள்வட்ட வடிவமுடைய நிலத்தோற்றங்களாகும். மேலிருந்து பார்ப்பதற்கு கவிழ்த்து வைக்கப்பட்ட படகு போன்று காட்சியளிக்கும்.
 
இன்சல்பர்க்குகள் (Inselbergs)
•    அரிக்கப்படாத எஞ்சிய குன்றுகளாக தரைப்பகுதியிலிருந்து உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றமே இன்சல்பர்க்குகள் ஆகும்.
•    இவைகள் செங்குத்து சரிவுகளையும் மற்றும் வட்ட வடிவ உச்சி பகுதிகளைக் கொண்டிருக்கும். காற்றின் அரிப்போடு தொடர்புடைய மற்றும் நிலத்தோற்றங்களாவன, மேசா (Mesa) பட்டிஸ் (Buttess)பட்டைக்கற்கள் (Ventifacts) முப்பட்டைக் கற்கள் மற்றும் ஊது பள்ளங்கள் (Deflastion Hallows)

காற்றில் படிவித்தலோடு தொடர்புடைய நிலத்தோற்றங்கள்
பின்வருவன காற்று படிவித்தலின் முக்கியமான நிலத்தோற்றங்களாகும்.
 
பர்கான் (Barchan)
•    இவைகள் பிறைச்சந்திர வடிவ மணற்குன்றுகள் ஆகும். காற்று வீசும் திசைக்கு ஏற்ப நிலையாக நகரும் தன்மை கொண்டவை, காற்று வீசும் திசையானது வன் சரிவினையும் மற்றும் எதிர் திசையானது மென் சரிவினையும் கொண்டிருக்கும்.
 
செஃப் (Self) அல்லது நீள் வடிவ மணற்குன்றுகள் (Longitudinal Dunes)
•    காற்று வீசும் திசைக்கு இணையாக பல கிலோ மீட்டர்கள் நீளத்திற்கு அமைந்திருக்கும் குறுகலான மணற்குன்றுகளே செஃப் அல்லது நீள் வடிவ மணற்குன்றுகள் ஆகும்.
 
லோயஸ் (Loss)
•    பாலைவனத்திற்கு அருகாமையிலுள்ள பகுதிகளில் படிந்திருக்கும் நுண்ணிய மணல் துகள்களே லோயஸ் ஆகும். இவை மஞ்சள் நிறமுள்ள மிகவும் வளமான மணல் துகள்களாகும்.

No comments:

Post a Comment