களப்பிரர் ஆட்சி
• சங்க காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் முடிவுற்றது.
• தமிழகத்தை மூவேந்தர்கள் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்த சங்க
காலத்தில், தமிழகத்திற்கு வடக்கே சாதவாகனப்
பேரரசர்களின் ஆட்சி (கி.மு.230-கி.பி.225) நடந்து வந்தது.
• கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவர்கள் என்பவர்கள்
சாதவாகனப் பேரரசர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்து, திறை செலுத்தித் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்தனர்.
• கி.பி. 225 இல் சாதவாகனர் ஆட்சி வீழ்ச்சியுற்றது.
• சாதவாகனரின் வீழ்ச்சிக்குப் பின்னர்த் தமிழக அரசியலில் பெரிய
மாறுதல்கள் ஏற்பட்டன.
• தொண்டை மண்டலத்தின் ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் பல்லவர்கள் ஏற்றுக்
கொண்டனர்.
• அவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆண்டு
வரலாயினர்.
• இதே நேரத்தில் தமிழகத்திற்கு வடக்கிலும், வடமேற்கிலும் உள்ள பகுதிகளில் வாழ்ந்திருந்த களப்பிரர் என்னும்
வேற்றுமொழி இனத்தவர் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தனர்.
• தொண்டை மண்டலத்தில் பல்லவர்கள் ஆட்சி செய்து வந்தபடியால் களப்பிரர்
தொண்டை மண்டலத்தைக் கைப்பற்ற முடியவில்லை.
• எனவே அவர்கள் தமிழகத்தின் தெற்கு நோக்கிப் படையெடுத்துச் சென்றனர்.
• அப்போது தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளை ஆண்டு வந்த மூவேந்தர்கள் வலிமை குன்றியும், தங்களுக்குள் ஒற்றுமை இன்றியும் இருந்தனர்.
• களப்பிரர் முதலில் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினர். பின்பு சேர,
சோழ நாடுகளைக் கைப்பற்றினர். கி.பி. 250 முதல்
575 வரை முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தின் பெரும்பகுதிகளைக் களப்பிரர்
ஆட்சி செய்தனர்.
• களப்பிரர் ஆட்சி செய்த இக்காலமே தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்
எனப்படுகிறது.
• களப்பிரர் காலத்தில் தமிழகத்தை ஆண்டு வந்த களப்பிர மன்னர்கள் யார்
யார் என்பது பற்றியும், அவர்களது ஆட்சி முறை பற்றியும்,
அவர்கள் காலச் சமுதாய நிலை பற்றியும் தெளிவாக
அறிந்துகொள்ள முடியவில்லை.
• எனவே களப்பிரர் காலம் தமிழக வரலாற்றில் இருண்ட காலம்
என்றும் கூறப்படுகிறது.
• இப்பாடத்தில் களப்பிரர் வரலாற்றை அறிய உதவும் சான்றுகள் சுட்டிக்
காட்டப்படுகின்றன.
• களப்பிரர் யார் என்பது பற்றியும், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றியும் கூறப்படும் பல்வேறு
கருத்துகள் விளக்கிக் காட்டப்படுகின்றன.
• தமிழகத்தை ஆண்ட களப்பிர மன்னர்கள் பற்றித் தெரியவரும் செய்திகள்
காட்டப்படுகின்றன.
• களப்பிரர் ஆட்சிக் காலத்தில் சமுதாய நிலை, சமய நிலை ஆகியவை எவ்வாறு இருந்தன என்பது விளக்கிக் கூறப்படுகிறது.
• களப்பிரர் காலம் இருண்ட காலம் எனப்பட்டாலும் நல்லதொரு இலக்கிய
வளர்ச்சியைப் பெற்றிருந்தது என்பது விளக்கிக் காட்டப்படுகின்றது.
No comments:
Post a Comment