LATEST

Saturday, January 11, 2020

புவி மேற்பரப்பு - மண் (Soil) பகுதி 2

மண் (Soil) பகுதி 2

செம்மண் (Red Soil)
• செம்மண் வண்டல்மண்ணிற்கும் மணலுக்கும் இடைப்பட்ட அளவிலான துகள்களால் உருவான மண். துகள்களுக்கிடையே ஓரளவு இடைவெளி உண்டு. ஓரளவு நீரை உறிஞ்சும் தன்மை உடையது.
•  செம்மண்ணிற்கு ஈரத்தைத் தேக்கி வைக்கும் சக்தி குறைவு. இதில் இரும்பு சத்து அதிகம். இதன் நிறத்திற்கு காரணமே இதில் இரும்பு ஆக்ஸைடுகள் அடங்கி இருப்பதுதான்.  செம்மண்ணில் பாஸ்பரஸ், நைட்ரஜன் சுண்ணாம்பு குறைந்தும் அமிலத்தன்மை மிகுந்தும் காணப்படுகின்றது.
•  செம்மண் சுமாராண வளமுடைய மண். விவசாயத்திற்கு ஏற்ற மண், புன்செய் பயிர்களான அவரை, துவரை போன்ற பயறு வகைகள், கடலை, ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துகள் பயிர் செய்ய மிகவும் ஏற்ற மண்.
•  இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் அதிகமாக உள்ள மண் வகை ஆகும். இம்மண் தென் கர்நாடகா, கோவா, வடகிழக்கு ஆந்திரபிரதேசம், மத்தியப்பிரதேசம், ஒரிசா, மேகாலயா தமிழ்நாடு மாநிலங்களில் காணப்படுகிறது.

கரிசல் மண் (Black Soil)
•   மிகவும் நுண்ணிய துகள்களால் ஆனது. துகள்களுக்கிடையே இடைவெளி குறைவு, நீரை விரைவாக உறிஞ்சாது ஈரப்பதத்தை அதிக நாட்கள் தாங்கும் தன்மை உடையது. எனவே குறைவாக மழை பொழிந்தாலும் அதிக நாட்கள் ஈரப்பதத்தை தேக்கி வைத்து பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது.
•  கரிசல்மண் பழுப்பு நிறத்திலிருந்து ஆழ்ந்த கருமை நிறம் வரை காணப்படுகிறது. கரிசல் மண்ணில் சுண்ணாம்புச் சத்து, இரும்பு, பொட்டாசியம், அலுமனியம், கால்சியம், மக்னீசியம், கார்பனேட்டு போன்றவைகள் மிகுதியாகக் காணப்படுகிறது. பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் குறைவாக உள்ளது.
•  விவசாயத்திற்கு ஏற்றது கரிசல் மண். இதில் பருத்தி, புகையிலை, மிளகாய், எண்ணெய் வித்துக்கள் போன்ற பயிர்களும் கம்பு, சோளம், திணை போன்ற தானிய வகைகளும் நன்றாக வளர்கின்றன.
•    இம்மண் மகாராஷ்டிரா, குஜராத், மத்தியபிரதேசம், ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு மாநிலங்களில் காணப்படுகிறது.

சரளை மண்(Laterite Soil)
• அதிக வெப்பமும் அதிக மழையும் வறண்ட காலநிலை கொண்ட பகுதிகளில் சரளை மண் உருவாகின்றது. 
சரளை மண் நுண்துகளை கொண்டிருப்பதால் இதிலுள்ள சிலிகா வேதியியல் வினையால் துளைகளின் மூலம் நீக்கப்படுகிறது.
•    இம்மண் கடின அமைப்பைக் கொண்டதாகவும் இதில் இரும்பு ஆக்ஸைடு இருப்பதால் சிவப்பு நிறம் ஆக்ஸைடு இருப்பதால் சிவப்பு நிறம் கொண்டதாக காணப்படுகிறது.
•    இது ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, ஒரிசா, கேரளா, அஸ்ஸாம் மாநிலங்களில் காணப்படுகிறது.
•    இதில் காப்பி, ரப்பர், முந்திரி, மரவள்ளி விளைவதற்கு ஏற்ற மண்.

Desart Soil:
•    இராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் மாநிலங்களில் காணப்படுகிறது.
•    இதில் பார்லி, திராட்சை, தர்பூசணி விளைவதற்கு ஏற்றது.

No comments:

Post a Comment