மண் (Soil) பகுதி 1
மண் (Soil)
புவியின் மேற்பரப்பில் மிகச்சிறிய பாறைத் துகள்களால் ஆன படலமே "மண்" எனப்படும். இதில் தாதுப்பொருட்கள், மடிந்த தாவரங்கள், பாக்டீரியாக்கள் போன்றவை காணப்படுகின்றன.
பாறைகளிலிருந்து சிதைக்கப்பட்டு புதிதாக உருவாகியுள்ள மண் வளமற்றதாக இருக்கும். இதனை வளமுடைய மண்ணாக மாற்றுவது தாவரங்களும் இறந்த விலங்கினங்களின் சிதைக்கப்பட்ட பாகங்களும் ஆகும். இலை மக்கு அதிக அளவில் மண்ணில் கலந்தால்தான் மண் நல்ல வளமான மண்ணாக மாறும்.
• தரையை ஒட்டிய முதல் அடுக்கில் மண் நுண்ணிய துகள்களாக உள்ளன. இதில் சிதைந்த தாவரப் பகுதிகளான இலை மக்கு அதிகம் காணப்படுகின்றன.
• இதற்கடுத்த இரண்டாம் அடுக்கில் மேலடுக்கில் இருந்த நீரினால் கரைக்கப்பட்டு கீழிறங்கி நுண்ணிய களிமண் போன்றவை காணப்படுகின்றன. இதனால் இவ்வடுக்கு அடர்ந்த நிறத்தை பெற்றுள்ளது.
• இதற்கும் கீழே உள்ள மூன்றாம் அடுக்கில் சிதைக்கப்பட்ட அடிப்பாறைத்துண்டுகள் காணப்படுகின்றன.
• நான்காவது அடுக்கு, சிதைக்கப்படாத கடினமான பாறையாக இருக்கிறது.
மணல் (Sand)
• மணல் துகள்களுக்கிடையே இடைவெளி இருப்பதால் மழைத்துளி விழ விழ மணலுக்குள் மறைந்து விடுகிறது. மணல், தாவர வளர்ச்சிக்கு ஏற்றதில்லை. காரணம் மணலில் இலை மக்குகள் இருப்பதில்லை. இதனால் மணலுக்கு வளம் குறைவு.
• மணற்பாங்கான பிரதேசம் விவசாயத்திற்கு ஏற்றதல்ல. ஆனால் மழைப்பொழிவு அதிகமுள்ள இடங்களில் தென்னை நன்றாக வளர்கிறது. மணல் சவுக்கு, முந்திரி போன்றவைகளும் நன்றாக வளர்கின்றன.
வண்டல் மண் (Alluvial Soil)
• மிகச் சிறிய துகள்களால் ஆனது வண்டல் மண். துகள்களுக்கு இடையே இடைவெளி இல்லை. எனவே தான் மழைப்பொழிவின் பொழுது நீர் தேங்குகிறது. வெள்ளம் பெருக்கெடுக்கின்றது.

• துகள்களுக்கு இடையே இடைவெளி இல்லாததால் நீரை உள்ளே ஈர்க்கும் தன்மை மிகக் குறைவு. ஆனால் ஈரத்தைத் தக்க வைக்கும் தன்மை அதிகம்.
• வண்டல் மண் ஈரமாக இருக்கும்போது, விரிவடைகிறது. அதேசமயம் நீரின்றி வறண்டு இருக்கும்போது சுருங்குகிறது. வண்டல்மண் பொட்டாசியம் சத்து மிக்கதாகவும், பாஸ்பரஸ் சத்து குறைவாகவும் உடையது.
• வண்டல் மண் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் காணப்படுகிறது.
• வண்டல் மண் வளமான மண், எல்லாப் பயிர்களும் வளர்வதற்கேற்ற மண். குறிப்பாக நெல், கரும்பு, வாழை போன்ற நன்செய் பயிர்களுக்கு மிகவும் ஏற்ற மண்.

No comments:
Post a Comment