LATEST

Saturday, January 11, 2020

புவி மேற்பரப்பு - நிலத்தடி நீர் (Under Ground Water)

நிலத்தடி நீர் (Under Ground Water)

•    நிலத்தடியில் அமைந்துள்ள தாய்பாறை, படிவுகள் மற்றும் மண் போன்றவற்றின் வெற்றிடங்கள் (Voids) அல்லது திறப்புகள் (Openings) உள்ளன. மேற்பரப்பு நீர், இத்திறப்புகளின் வழியாக நிலத்தினுள் கசிந்துச் செல்கிறது. இத்திறப்புகள் ஸ்பான்ஞ் ஒன்றில் அமைந்து இருப்பதைப் போலவே இருக்கின்றன. இவை நுண்துளை இடங்கள் (Pore Spaces) எனப்படுகின்றன.
•    ஒரு பொருளின் நுண்துளை இடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே அங்கு சேமிக்கப்படுகிற நிலத்தடி நீரின் அளவு அமைகிறது. இந்த நுண்துளையிடங்களை கொண்டுள்ள பாறை நுண்துளைபாறை (Porus Rocks) எனப்படுகிறது.
•    பாறையின் மொத்த கொள்ளளவு, அதிலுள்ள நுண்துளை கொள்ளளவு இடையேயான விகிதமே நுண்துளை இயல்பு (Porosity) ஒரு பாறையின் நுண்துளையிடங்களின் வழியாக நீர் கசித்துக் செல்வதற்கு அனுமதிக்கிற ஆற்றலே ஊடுருவ இடந்தரும் இயல்பாகும் (Permiability).
•    மணல் போன்ற ஊடுருவ இடம் தரும் இயல்புடைய பாறைகள் உறிஞ்சுப்பாறைகளாகும்
(aquifers) களிமண் போன்ற ஊடுருவ இடந்தரா இயல்புக் கொண்டப்பாறைகள் உறிஞ்சாப் பாறைகளாகும்.(aquicludes)
•    மணல், பரல்கள் போன்றவற்றிலும், பாறைகளிலும் அமைந்துள்ள நுண்துளை இடங்களை நீர் கசிந்து நிரப்புகிறது. இது செறிவு மண்டலமாகும் (Saturation Zone) இங்கு தங்கும் நீரே நிலத்தடிநீராகும். இதன் நேர் எல்லையே நீர்மட்டமாகும் (Watertable)
•    நிலத்தடிநீர் அமைந்துள்ள பாறையிலுள்ள இணைப்பு படுகை தளம் போன்ற வலுவற்ற பகுதிகளில் ஊடுருவிச் செல்லும்.
•    நீர், காலபோக்கில் அவற்றைக் கரைத்து சிறு நிலத்தடிக்குகைகளை (Caverns) உருவாக்குகின்றன.
•    நிலத்தடிக் குகைகளில் நீண்டகாலமாக சொட்டுச்சொட்டாக நீர் இடைவிடாது வழிந்து உருவாகிற கல்வடித்தோற்றங்களே சொட்டுக்கற்களாகும் (Drop Stones).
•    நிலத்தடிக் குகையின் தளத்திலிருந்து மின்னுகிற பனித்துளியால் ஆன பதக்கங்களை போல, தொங்குகிற பாறை தொங்குகூசிப் பாறையாகும் (Stalactites).
•    அதுபோலவே, நிலத்தடிக்குகையின் தரையில் உருவாகி அதன் தளத்தை நோக்கி வளருகின்ற சொட்டுக்கற்கள் பொங்கு கூசிப்பாறையாகும். (Stalagmites)
•    பள்ளங்களுடன் சீரற்று காட்சியளிக்கும் ஒரு நிலத்தோற்றயே கார்ஸ்ட் (Karst) எனப்படும். இதிலுள்ள பள்ளங்களை "அமிழ்துளைகள்" (அ) அமிழிகள் (Sink holes) என அழைக்கிறோம.; இவை மண்ணின் கீழே உள்ள சுண்ணாம்புப்பாறைகளை மழைநீர் கரைத்தெடுப்பதால் உருவாகின்றன.

No comments:

Post a Comment