LATEST

Monday, January 6, 2020

TNPSC புவியியல் பேரண்டம் - அட்சக்கோடுகள் (Latitudes), தீர்க்கக்கோடுகள் (Longitudes)

அட்சக்கோடுகள் (Latitudes), தீர்க்கக்கோடுகள் (Longitudes)

அட்சக்கோடுகள் (Latitudes)
•    புவிக்கோளத்தின் மீது கிழக்கு மேற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் அட்சக்கோடுகள் எனப்படுகின்றன.
•    புவிக்கோளத்தின் நடுவில் வரையப்பட்டுள்ள 0 அட்சக்கோடு புவியிடைக்கோடு (பூமத்திய ரேகை) எனப்படும். புவியிடைக்கோடு புவிக்கோளத்தை இரு சம அரைக்கோளங்களாகப் பிரிக்கிறது.
•    இக்கோட்டிற்கு வடக்கேயுள்ள அரைக்கோளம் வட அரைக்கோளம் எனவும், தெற்கேயுள்ள அரைக்கோளம் தென் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.

தீர்க்கக்கோடுகள் (Longitudes)
•    புவிக்கோளத்தின் மீது வடக்கு தெற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் தீர்க்கக்கோடுகள் எனப்படுகின்றன.
•    0 தீர்க்கக்கோடும் புவிக்கோளத்தை இரண்டு அரைக்கோளங்களாகப் பிரிக்கிறது. 0 தீர்க்கக்கோட்டுக்குக் கிழக்கிலுள்ள அரைக்கோளத்தைக் கிழக்கு அரைக்கோளம் என்றும், மேற்கிலுள்ள அரைக்கோளத்தை மேற்கு அரைக்கோளம் என்றும் குறிப்பிடுகின்றோம்.
•    0 தீர்க்கக்கோடு கிரீன்விச் தீர்க்கக்கோடு எனவும் அழைக்கப்படுகிறது
•    முழுக்கோளத்தில் 0 தீர்க்கக்கோடும், 360 தீர்க்கக்கோடும் ஒரே தீர்க்கக்கோடாகும்.
•    அரைக்கோளத்தில் 180 கிழக்குத் தீர்க்கக்கோடும் 180 மேற்குத் தீர்க்கக்கோடும் ஒரே தீர்க்கக்கோடாகும்.
 
அளவு
•    துருவ விட்டம் (Polar diameter) 12715.43 கி.மீ
•    பூமத்திய ரேகை விட்டம் (Equatorial diameter) 12756.32கி.மீ
•    துரவ சுற்றளவு (Polar Circumference) 40.005கி.மீ
•    பூமத்திய ரேகை (Equatorial Circumference) 40.077 கி.மீ
 
பகுதி
•    மொத்த பரப்பளவு 509,700,000 சதுர கி.மீ
•    நிலப்பகுதியின் பரப்பளவு 148,400,000 சதுர கி.மீ
•    நீர் பரப்பளவு 361,300,000 சதுர கி.மீ

முக்கிய அட்சக்கோடுகள்    - கோணம்
புவியிடைக்கோளம்      -0’
வட அரைக்கோளம்   
வட அயனக்கோடு  -   23 ½’வ
ஆர்டிக் வட்டம்   -  66 ½’வ
வட துருவம்   -  90’ வ
தென் அரைக்கோளம்   
தென் அயனக்கோடு  -   23 ½’தெ
அண்டார்டிக் வட்டம்  -   66 ½’தெ
தென் துருவம்    -  90| தெ

நேரமண்டலம்:
•    புவிக்கோள மாதிரியில் மொத்தமாக 360 தீர்க்கக்கோடுகள் வரையப்பட்டுள்ளன. புவிக்கோளத்தின் மைய தீர்க்கக்கோடுகள் 0 கிரின்விச் தீர்க்கக்கோடாகும். இந்த தீர்க்கக்கோட்டின் மீது சூரியன் நேரடியாக பிரகாசிக்கும் பொழுது நண்பகல் 12 மணியாக உலகில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த தீர்க்கக்கோட்டின் நேரமே உலக திட்ட நேரமாகும்.
•    புவி தனது அச்சில் சூரியனை நோக்கிய வண்ணம் மேற்கிறலிருந்து கிழக்காக சுழல 24 மணிநேரம் எடுத்துக்கொள்கிறது. 
•    புவிக்கோளத்தின் மீது வரையப்பட்டுள்ள 360 தீர்க்கக்கோடுகளும் சூரியனை நோக்கிய வண்ணம் ஒரு முறை சுழல 24 மணிநேரம் எடுத்துக் கொள்கின்றன (24-60 1440 நிமிடங்கள்)
•    ஒரு தீர்க்கக்கோட்டை (1) கடக்க 4 நிமிடங்கள் (1440 நி 360| தீ... 4 நிமிடங்கள்) ஆகிறது.
•    இந்தியாவின் கிழக்கு விளிம்பில் 97 கிழக்கு தீர்க்கக்கோட்டில் அமைந்துள்ள மாநிலம் அருணாசல பிரதேசமாகும். அது போல மேற்கு விளிம்பில் 68 கிழக்கு தீர்க்கக்கோட்டில் அமைந்துள்ள மாநிலம் குஜராத் ஆகும்.
•    அருணாசலபிரதேசத்திற்கும் குஜராத் மாநிலத்திற்கும் இடையில் 29 தீர்க்கக்கோடுகள் செல்கின்றன. ஒரு தீர்க்கக்கோட்டை கடக்க 4 நிமிடங்கள் என்றால் 29 தீர்க்கக்கோடுளைக் கடக்க 1 மணி 56 நிமிடங்கள் ஆகின்றன.
 
இந்திய திட்ட நேரம் (Indian Standard Time)
•    இந்தியாவின் மைய தீர்க்கக்கோடு 82'30o கி தீர்க்கக்கோடாகும். இந்த தீர்க்கக்கோட்டின் மீது சூரியன் நேரடியாக பிரகாசிக்கும் பொழுது நண்பகல் 12 மணியாக இந்தியவில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த தீர்க்கக்கோட்டின் நேரமே இந்தியாவின் திட்ட நேரமாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
 
தற்சுழற்சி (Rotation)
•    சுமார் 23 மணி 56 நிமிடத்திற்கு ஒருமுறை பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. அதையே பூமியின் தற்சுழற்சி என்கிறோம். இதன் காரணமாகத்தான் பகல் இரவு மாற்றம் ஏற்படுகிறது.
 
சூரியனைச் சுற்றிவருதல் (Revolution)
•    சூரியனை புவி தனது அச்சில் 231/2 சாய்ந்தவண்ணம் வலம் வருவதால் புவிப்பரப்பில் பருவகாலங்கள் உருவாகின்றன.
•    பூமி, சூரியனை ஒரு முறை சுற்றிவர எடுக்கும் கால இடைவெளியைத்தான் ஓர் ஆண்டு எனக் குறிக்கிறோம். சுமார் 365.24 நாள்கள் கொண்டது ஓர் ஆண்டு ஆகும்.

No comments:

Post a Comment