பருவக்காலங்கள்
• புவிப்பரப்பில் நிலவுகின்ற வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு ஓர் ஆண்டு நான்கு பருவகாலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
• அவை வேனிற்காலம் (கோடைக்காலம்), இலையுதிர் காலம், குளிர்காலம், வசந்தகாலம் எனப்படுகின்றன.

வேனிற்காலம்(Summer)
• ஜீன்-21 அன்று சூரியன் வட அரைக்கோளத்தில் வட அயனக்கோட்டுக்கு நேராகப் பிரகாசிக்கும்.
• இதனால் சூரியனின் கதிர்கள் வட அயனக்கோட்டின் மீது செங்குத்தாக வீழ்கின்றன.
• ஆதலால் வட அரைக்கோளத்தில் அமைந்துள்ள எல்லா இடங்களிலும் சூரிய வெளிச்சம் பன்னிரெண்டு மணி நேரத்திற்கும் மேலாக இருக்கின்றது. இக்காலத்தில் வட அரைக்கோளத்தில் நீண்ட பகற்பொழுதும் குறுகிய இராப்பொழுதும் காணப்படும். இதுவே வேனிற்காலம் என்று அழைக்கப்படுகிறது.
• வட அரைக்கோளத்தில் ஜீன், ஜீலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களுக்கு வேனிற்காலம் நிலவுகிறது. அதேசமயத்தில் தென்துருவம் சூரியனிடமிருந்து விலகி அமைந்துள்ளதால் தென் அரைக்கோளத்தில் குளிர்காலமாகும்.

இலையுதிர்காலம் (Autum)
• சூரியன் புவியிடைக்கோட்டின் மீது செப்டம்பர் 23- ஆம் நாள் நேரடியாகப் பிரகாசிக்கிறது.
• இதனால் சூரியனின் கதிர்கள் புவியிடைக்கோட்டின் மீது செங்குத்தாக வீழ்கின்றது. வடதுருவமும் தென்துருவமும் சூரியனிடமிருந்து சமதொலைவில் அமைந்துள்ளது. இந்நிலையில் இரண்டு அரைக்கோளமும் சூரியனை நோக்கி சமமாக உள்ளது.
• இதுவே வட அரைக்கோளத்தில் இலையுதிர்காலம் என்று அழைக்கப்படுகின்றது.

• வட அரைக்கோளத்தில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கு இலையுதிர்காலம் நிலவுகிறது. அச்சமயம் தென் அரைக்கோளத்தில் வசந்த காலமாகும்.
குளிர்காலம் (Winter)
• டிசம்பர் 22 அன்று சூரியன் தென் அரைக்கோளத்தில் தென் அயனக்கோட்டுக்கு நேராகப் பிரகாசிக்கும். இதனால் சூரியனின் கதிர்கள் தென் அயனக்கோட்டின் மீது செங்குத்தாக வீழ்கின்றன.
• தென் அரைக்கோளத்தில் அமைந்துள்ள எல்லா இடங்களிலும் சூரிய வெளிச்சம் அதே சமயத்தில் வட துருவம் சூரியனிடமிருந்து விலகி அமைந்துள்ளதால் வடதுருவப்பகுதி இருளில் மூழ்கி இருக்கும்.
• வட அரைக்கோளத்தில் இதர இடங்களில் நீண்ட இராப்பொழுதும் குறுகிய பகற்பொழுதும் காணப்படும். இதுவே வடதுருவத்தில் குளிர்காலம் என்று அழைக்கப்படுகிறது.

• வட அரைக்கோளத்தில் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மூன்று மாதங்களுக்குக் குளிர்காலம் நிலவுகிறது. இக்காலம் தென் அரைக்கோளத்தில் வேனிற்காலம் என்று அழைக்கப்படுகிறது.
வசந்த காலம் (Spring)
• புவி சூரியனைத் தொடர்ந்து வலம் வருகின்ற பொழுது சூரியன் வடக்கு நோக்கி நகர்வதைப்
போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது. சூரியன் புவியிடைக்கோட்டில் மார்ச் 21ம் நாள் நேரடியாகப் பிரகாசிக்கிறது.
• இதனால் சூரியனின் கதிர் புவியிடைக்கோட்டின் மீது செங்குத்தாக வீழ்கின்றது. வடதுருவமும் தென்துருவமும் சூரியனிடமிருந்து சமதொலைவில் அமைந்துள்ளன. இந்நிலையில் இரண்டு அரைக்கோளமும் சூரியனை நோக்கி உள்ளன.
• ஆகையால் இவ்விரு அரைக்கோளத்திலும் இரவு நேரமும் பகல் நேரமும் சமமாக உள்ளன. இதுவே வட அரைக்கோத்தில் வசந்தகாலம் என்று அழைக்கப்படுகின்றது.

• வட அரைக்கோளத்தில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கு வசந்தகாலம் நிலவுகிறது. அதேசமயத்தில் தென் அரைக்கோளத்தில் இலையுதிர் காலம் என்று அழைக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment