கோளங்கள்
• நிலப்பகுதிகள் கொண்ட பூமியின் மேற்பகுதி நிலக்கோளம் (Lithosphere) எனவும், நீர் தேங்கிய பகுதிகள் நீர்க்கோளம் (Hydrosphere) எனவும், காற்று படர்ந்த பகுதி வளிமண்டலம் (Atmosphere) எனவும் கூறப்படும்.
• உயிர்கள் செறிந்த பகுதி உயிர்க்கோளம் எனவும் வழங்கப்படுகிறது. நிலக்கோளம், நீர்க்கோளம் மற்றும்ம வளிமண்டலம் எனும் மூன்று கோளங்களின் கூட்டு விளைவுதான் உயிர்க்கோளம் (Biosphere)ஆகும்.

நிலக்கோளம்:
• நிலக்கோளம் கண்டங்கள் மற்றும் கடல்கள் என இரண்டாக பிரிக்கப்படுகின்றது.

கண்டங்கள்:
• கடல்கள் இன்றித் தொடர்ச்சியான அகண்ட நிலப்பரப்புகள் தாம் கண்டங்கள் எனப்படுகின்றன. உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன.

1. ஆசியா:
• ஏழு கண்டங்களில் மிகப் பெரியது ஆசியா.
• இது பூமியின் வட அரைக்கோளத்தில் உள்ளது.
• நாம் வாழும் இந்தியா ஆசியாக் கண்டத்தில் உள்ளது.
• கோபி குளிர்பாலைவனம், உயரமான இமயமலைத்தொடர் முதலியவை இக்கண்டத்தில் உள்ளன.

2. ஆப்பிரிக்கா:
• பரப்பளவில் இது இரண்டாவது பெரிய கண்டம் ஆகும். இந்த கண்டம் வட அரைக்கோத்திலும், தென் அரைக்கோத்திலும் பரவியுள்ளது. நிலநடுக்கோடு இந்தக் கண்டத்தை இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.
• உலகில் மிக நீளமான நைல் நதி (6696 கி.மீ) இக்கண்டத்தில் பாய்கிறது. மிகப் பெரிய பாலைவனமான சகாராவும் இக்கண்டத்தில் தான் உள்ளது. அடர்ந்த காடுகள் மற்றும் கனிம வளங்களின் செறிவுமிக்கது இக்கண்டம்.

3. வட அமெரிக்கா:
• அட்லாண்டிக் பசிபிக் மற்றும் ஆர்டிக் பெருங்கடல்களால் சூழப்பட்ட கண்டம் இது. இதன் மேற்குப் பகுதியிலுள்ள ராக்கி மலைத்தொடர் மிக நீண்ட மலைத்தொடர்.

4. தென் அமெரிக்கா:
• இக்கண்டம் பெரும் அளவு தென் அரைக்கோளத்தில் அமைந்துள்ளது. உலகில் நீளமான ஆண்டிஸ் மலைத்தொடர், இந்தக் கண்டத்தில் தான் உள்ளது. உலகின் மிக அகன்ற அமேசான் ஆறு (6586 கி.மீ நீளம்) இக்கண்டத்தில் உள்ளது.

5. ஐரோப்பா:
• ஆசியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கண்டம் இது. ஆல்ப்ஸ் மலைத்தொடர் ஐரோப்பாவில் உள்ளது.

6. ஆஸ்திரேலியா:
• நான்கு பக்கமும் கடல்களால் சூழப்பட்ட ஆஸ்திரேலியா ஒரு தீவுக் கண்டம் (Island Continent) இக்கண்டம் நியூசிலாந்து, பிஜி போன்ற பல தீவுகளைக் கொண்டது.
• பிஜித் தீவுகள், பாப்புவா, நியூகினியா முதலிய தீவுகள் பொதுவாக ஒசியானியத் தீவுகள் என அழைக்கப்படுகின்றன.
• கிரேட் பாரியர் ரீப் எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை ஆஸ்திரேலியக் கடற்கரையில் உள்ளது.
• மிகப் பெரிய பவளப்பாறை – ஆஸ்திரேலியக் கடற்கரையில் உள்ளது.

7. அண்டார்டிகா:
• தென் துருவப் பகுதியில் உள்ள இக்கண்டம் முழுவதும் பனி படர்ந்துள்ளது. இது மிகக் குளிர்ந்த பகுதி. பென்குயின் பறவை. சீல் போன்ற உயிரினங்களின் வாழ்விடம் இது.
• இங்கு ஆய்வுகள் மேற்கொள்வதற்காக "தட்சிண் கங்கோத்ரி" மற்றும் "மைத்ரேயி" எனும் ஆய்வுக் குடியிருப்புகளை நம் நாடு நிறுவியுள்ளது. ஆண்டு முழுவதும் இந்திய விஞ்ஞானிகள் பலர் இங்கு ஆய்வு செய்து வருகின்றனர்.

No comments:
Post a Comment