LATEST

Wednesday, February 19, 2020

கம்பெனி ஆட்சி (1773-1857) - பகுதி 2

கம்பெனி ஆட்சி (1773-1857) - பகுதி 2

வருடச் சட்டம்-1786

•    கவர்னர் ஜெனரலுக்கு தனது ஆலோசனைக்குழுவின் பெரும்பான்மையோரின் முடிவை புறக்கணிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டது. (power to over write the council)
•    கவர்னர் ஜெனரலே இந்தியாவிலுள்ள பிரிட்டிஸ் படையின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். (commander in chief)
•    ஆனால் கம்பெனி இயக்குநர்கள் குழுவின் அனுமதியின்றி கவர்னர் ஜெனரல் இந்தியாவில் போர் பிரகடனம் செய்யக்கூடாது.

வருட பட்டயச் சட்டம்-1793 (Charter Act of 1793)

•    கம்பெனியின் வியாபார முற்றுரிமை மேலும் இருபது ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. (monopoly of trade 20 years extended)
•    கவர்னர் ஜெனரல், மாநில கவர்னர்கள், படைத்தளபதி ஆகியோர் தங்கள் பதவிக்காலத்தின் போது இந்தியாவை விட்டு வெளியே போகத் தடை விதிக்கப்பட்டது.
•    கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணையர்கள் எண்ணிக்கை 6 முதல் 5 ஆக குறைக்கப்பட்டது.
•    புதிய நிலப்பகுதிகளை வெற்றி கொள்ள தடை என்பது மீண்டும் வலியுறுத்திக் கூறப்பட்டது.
•    கட்டுப்பாடு வாரியத்திற்கு ஆகும் செலவுகளை இந்திய வருமானத்திலிருந்தே கொடுக்க வேண்டும் என கூறப்பட்டது. இந்நிலை 1919-ம் வருட இந்திய அரசாங்கச் சட்டம் இயற்றப்படும் வரை நீடித்தது.
•    கவர்னர் ஜெனரலுக்கு மாநிலங்களின் அமைதிகான நீதிபதி (Justices of peace) நியமிக்க உரிமை கொடுக்கப்பட்டது.
•    All laws to be translated in Indian languages
•    Laid down the written laws interpreted by court

No comments:

Post a Comment