LATEST

Wednesday, February 19, 2020

கம்பெனி ஆட்சி (1773-1857) - பகுதி 4

கம்பெனி ஆட்சி (1773-1857) - பகுதி 4

வருட பட்டயச் சட்டம்-1833

•    இச்சட்டம் இந்தியாவில் ஒரு மைய ஆட்சிமுறை அமைய வழிவகுத்தது.
•    வங்காள கவர்னர் ஜெனரல் இந்திய கவர்னர் ஜெனரலாக அறிவிப்பு.
•    முதல் இந்திய கவர்னர் ஜெனரல்- வில்லியம் பென்டிங் பிரபு. (GGB -> GGI) = Central Government
•    கவர்னர் ஜெனரலும் அவரது ஆலோசனை சபையும் தங்கள் ஆட்சியின் கீழ் இருக்கும் மாகாணங்கள் மீது மேற்பார்வையிடுதல், கட்டளையிடுதல், கட்டுப்பாடு செய்தல் போன்ற அதிகாரங்களை பெற்றார்.
•    இந்திய முழுமைக்குமான “ஒரே வரவு செலவு திட்டம்” கவர்னர் ஜெனரலினால் தயாரிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறியது.
•    மத்திய அரசின் சட்டம் இயற்றும் அதிகாரம்
•    கவர்னர் மற்றும் கவர்னர் ஜெனரலின் ரத்து ஆணை அதிகாரம் (Veto Power)
•    ஆலோசனை சபையில் சட்ட உறுப்பினர் சேர்க்கப்படுதல் சட்டவல்லுநர் ஒருவர் 4-வது உறுப்பினராக சேர்ப்பு முதல் சட்ட உறுப்பினர்- மெக்காலே பிரபு (Law member without Voting power was added)
•    இந்தியர்களுக்கு எதிரான வேற்றுமை ஒழிக்கப்பட்டது.
•    எந்த இந்தியனும் சமயம், சாதி நிற வேறுபாட்டால் வேலை பெறும் வாய்ப்பை இழக்கக்கூடாது திறமை மட்டுமே அரசாங்க வேலையில் சேரத்தகுதியாகும் என்ற கூறப்பட்டது.
•    இந்தியர்கள் நலன்கள் காக்கப்படுதல்
•    இந்திய மக்களின் நலன்களை பேணுதற்கான சட்டங்களை இயற்ற கவர்னர் ஜெனரலுக்கு அதிகாரம் வழங்கியது. இதன் அடிப்படையில் தான் இந்தியாவில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டது. பல சமுதாய சீர்திருத்தம் சட்டங்கள் இயற்றப்பட்டன.
•    கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் இனி “இந்தியவிற்கான அமைச்சர்” என அழைக்கப்படுவார்.
•    சட்டக்குழு உருவாக்கப்பட்டது. A Law commission was constituted for codification of law..

No comments:

Post a Comment