LATEST

Wednesday, February 19, 2020

கம்பெனி ஆட்சி (1773-1857) - பகுதி 6

கம்பெனி ஆட்சி (1773-1857) - பகுதி 6

வருட சட்டம்-1858 (இந்திய அரசாங்க சட்டம்)

•    இந்தியாவில் கம்பெனி ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. அதிகாரங்கள் கம்பெனியிடம் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு மாற்றப்பட்டது.
•    கவர்னல் ஜெனரல் இங்கிலாந்து அரச பிரதிநிதி (Viceroy) என்று அழைக்கப்பட்டார்.
•    முதல் வைஸ்ராய் கானிங் பிரபு
•    கம்பெனியின் ராணுவம், கப்பற்படையும் இங்கிலாந்து அரசாங்கத்தின் பொருப்பிற்கு மாற்றப்பட்டன.
•    இந்திய அரசு நியமன அதிகாரங்களை பெற்றார்.
•    இந்திய அரசு செயலாளர் நியமனம் செய்யப்பட்டார். 1858ம் வருடச் சட்டப்படி கட்டுப்பாட்டு வாரியம் இயக்குநர் குழுவும் ஒழிக்கப்பட்டது. இவைகளின் பொறுப்பின் அனைத்தும் இந்தியா அரசு செயலரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தியா அரசு செயலர் இங்கிலாந்து அமைச்சரவையில் ஓர் அங்கம் வகீத்தார். இந்திய அரசு செயலருக்கு ஆலோசனை கூற 15 பேர் கொண்ட- இந்தியா கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது. இதில் 8 பேர் அரசியலாலும், 7 பேர் தற்போது இருந்த இயக்குநர்களால் நியமிக்கப்படுவர் இதில் இந்தியர்கள் யாரும் இல்லை. இந்திய அரசு செயலாளர் இந்தியா கவுன்சிலின் சட்டங்களுக்கு தலைமை தாங்குவார். கவுன்சில் பெரும்பான்மை முடிவை மீறி செயல்பட செயலாளருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
•    சமநிலை வாக்கு ஏற்படும்போது “முடிவு செய்யும் வாக்கு செயலாளருக்கு கொடுக்கப்பட்டது”.
•    ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் முன் இந்தியாவின் ஆட்சி முறையில் பற்றி ஒரு அறிக்கையினை சமர்ப்பிப்பார்.
•    இந்திய கவுன்சில் பரிந்துறை அதிகாரத்தை பெற்றிருத்தல்
•    இந்தியாவிலிருந்து கிடைக்குகின்ற வருமானத்தை இந்திய விவகாரங்களுக்கு செலவிட வேண்டும்.

No comments:

Post a Comment