LATEST

Wednesday, February 19, 2020

வருட இந்திய கவுன்சில் சட்டம்

வருட இந்திய கவுன்சில் சட்டம்

வருட இந்திய கவுன்சில் சட்டம்: -1861

•    வைசிராயின் நிர்வாக உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 முதல் 5 ஆக உயர்த்தப்பட்டது. அதன்படி புதிதாக நிதித்துறை வல்லுநர் ஒருவர் நியமிக்கப்பட்டார்.
•    இலாக ஒதுக்கீடு செய்யும் முறை அறிமுகம் (Portfolio Systems)
•    மாநில சட்டமன்றங்களுக்கு மீண்டும் சட்டஇயற்றும் உரிமை (1833-ல் Chart & Act மூலம் இழந்த உரிமை 1861ல் பெற்றனர்)
•    மாநிலங்களின் எல்லைகளை மாற்றவும், திருத்தி அமைக்கவும், புதிய மாநிலங்களை உருவாக்கவும் வைசிராய்க்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
•    சென்னை, பம்பாய், கல்கத்தா மாநிலங்களில் உயர்நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
•    சட்டமியற்றும் பணியில் இந்தியர்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.

வருட இந்திய கவுன்சில் சட்டம்:- 1892

•    மைய சட்டமன்றத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10க்கு குறையாமலும், 16க்கு மேற்படாமலும் விரிவாக்கப்பட்டது.
•    உறுப்பினர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தை விவாதிக்கும் உரிமை கொடுக்கப்பட்டது. ஆனால் அதன் மீது வாக்களிக்கும் உரிமை கிடையாது.
•    சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொதுநலன்கள் பற்றிக் கேள்வி கேட்கும் உரிமை அளிக்கப்பட்டது. ஆனால் சபைத் தலைவருக்கு 6 நாட்களுக்கு முன்பே கேள்வி கேட்பது பற்றிய செய்தியைக் தெரிவிக்கவேண்டும்.
•    பிரதிநித்துவ ஆட்சி முறைக்கு வழி வகுத்தது. சட்டமன்ற உறுப்பினரை நியமிப்பதை விட தேர்ந்தெடுக்கபடல் வேண்டும் என்ற கோரிக்கை ஒப்புக் கொள்ளப்பட்டது.
•    தேர்தல் என்ற வார்த்தை அறிமுகம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment