LATEST

Saturday, February 1, 2020

மக்களாட்சி வினா விடை பகுதி 1

மக்களாட்சி

வினா விடை பகுதி 1

1. தற்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அரசாங்க முறை ---------
அ) குடியாட்சி
ஆ) உயர் குடியாட்சி
இ) மக்களாட்சி
ஈ) சர்வாதிகாரம்
விடை: இ) மக்களாட்சி

2. நேரடி மக்களாட்சி பழங்காலத்தில் நடைமுறையில் இருந்த நாடு -----------
அ) கிரீஸ்
ஆ) இத்தாலி
இ) சார்டினியா
ஈ) சைப்ரஸ்
விடை: அ) கிரீஸ்

3. தெலுங்கு தேசம் எனப்படுவது -----------
அ) மாநில கட்சி
ஆ) தேசியக் கட்சி
இ) சர்வதேச கட்சி
ஈ) கலாச்சார கட்சி
விடை: அ) மாநில கட்சி

4. ஒரு நாட்டில் இரண்டு கட்சி முறை இருக்குமேயானால் அதற்குப் பெயர்
அ) ஒரு கட்சி முறை
ஆ) இரு கட்சி முறை
இ) பல கட்சி முறை
ஈ) வட்டாரக் கட்சி முறை
விடை: ஆ) இரு கட்சி முறை

5. எதிர்கட்சி தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள அந்தஸ்து ------------
அ) காபினட் அமைச்சர்
ஆ) இணை அமைச்சர்
இ) மாநில அமைச்சர்
ஈ) அமைச்சரவை அமைச்சர்
விடை: அ) காபினட் அமைச்சர்

6. தேர்தலில் வாக்களிக்க தகுதியான வயது
அ) 21
ஆ) 18
இ) 25
ஈ) 35
விடை: ஆ) 18

7. மத்தியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட அமைப்பு
அ) சட்டமன்றம்
ஆ) உச்ச நீதிமன்றம்
இ) பொதுக்கட்சிகள் அவை
ஈ) பாராளுமன்றம் 
விடை: ஈ) பாராளுமன்றம்

8. தேர்தல் ஆணையருக்கு இணையாக அதிகாரம் கொண்டிருப்பவர் -------
அ) உயர்நீதிமன்ற நீதிபதி
ஆ) உச்ச நீதிமன்ற நீதிபதி
இ) மாவட்ட நீதிபதி
ஈ) மாஜிஸ்ட்ரேட்
விடை: ஆ) உச்ச நீதிமன்ற நீதிபதி

9. மாநில தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்பவர் ----------
அ) தலைமை தேர்தல் ஆணையர்
ஆ) தலைமை தேர்தல் அதிகாரி
இ) உச்சநீதிமன்ற நீதிபதி
ஈ) உயர்நீதிமன்ற நீதிபதி
விடை: ஆ) தலைமை தேர்தல் அதிகாரி

10. இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம் ---------
அ) சென்னை
ஆ) மும்பை
இ) முராதாபாத்
ஈ) புதுடெல்லி
விடை: ஈ) புதுடெல்லி

No comments:

Post a Comment