LATEST

Friday, February 14, 2020

இந்திய வடிகாலமைப்பு பகுதி 1

இந்திய வடிகாலமைப்பு பகுதி 1


பொதுவாக இந்தியாவில் பாயும் ஆறுகளை இருவகைகளாகப்பிரிக்கலாம். அவை:
1. வடஇந்தியாறுகள்
2. தென்னிந்திய ஆறுகள் அல்லது தீபகற்ப ஆறுகள்.

வடஇந்திய ஆறுகள்

•    வட இந்திய ஆறுகளில் சிந்து, கங்கை,பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகள் அடங்கிஉள்ளன.
•    வட இந்திய ஆறுகள் தென்மேற்குப்பருவக்காற்று மழை மற்றும் பனி உருகி வரும் நீரால் ஆண்டு முழுவதும் வெள்ளம் கொண்டவை. இவ்வாறுகள் நீர் மின் உற்பத்திக்குப் பெரிதும் பயன்படுகின்றன. இவை உள்னாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்குப்பயன்படுகின்றன.

சிந்து

•    உலகின் மிக நீண்ட ஆறுகளில் ஒன்றாகும். 2900 கிமீட்டர் நீளமுடையது. இதில் 709 கிமீ இந்தியாவில் உள்ளது.

•    இவை இமயமலையில் உள்ள கயிலைக்குன்றுப் பகுதியில் அமைந்த மானசரோவர் ஏரியில் உற்பத்தியாகி,பஞ்சாப் வழியாகப் பாய்ந்து, பிறகு பாகிஸ்தான் பகுதியில் நுழைந்து அரபிக்கடலில் கலக்கிறது. இதன் பெரும்பகுதி பாகிஸ்தானில் உள்ளது.

•    ஜீலம் , சீனாப், ராவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய ஆறுகள் சிந்துவின் துணையாறுகள் ஆகும். .இவற்றில் ஜீலம்,சீனாப் மற்றும் சிந்து ஆகிய பாகிஸ்தானில் பாய்கிறது.

•    இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்குமிடையில் 1960-ல் சிந்து நதி நீர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி ராவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய ஆறுகளின் நீரை வரம்பின்றி இந்தியா பயன்படுத்தும் அதிகாரம் பெற்றது.

•    பிற இரு துணையாறுகளின் நீர்பயனாக்கம் வரையறுக்கப்பட்டுள்ளது.

•    சிந்து நதியால் நமக்குக் கிடைக்கும் நீர் பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் நீர்ப்பாசனத்திற்கும்,மின்சக்திக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

•    சிந்து ஆற்றின் அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாற்றின் கிழக்குப் பகுதியின் பெருநிலத்தை இந்தியா என்றும், அப்பகுதி மக்களை இந்து என்றும் பண்டைய ஐரோப்பியர் அழைத்ததே நம்பாரதம் இந்திய என்று பெயர் பெற்றது. (இந்துகுஷ் மலையில் இருந்து வந்ததாகவும் கூறுவர்)

No comments:

Post a Comment