LATEST

Friday, February 14, 2020

இந்திய வடிகாலமைப்பு பகுதி 2

இந்திய வடிகாலமைப்பு பகுதி 2

கங்கை

•    இந்தியாவின் புனித நதி கங்கை. இவை இமயமலையில் உள்ள கங்கோத்ரி என்ற பனியாற்றில் உற்பத்தி ஆகிறது. இந்த ஆற்றின் நீளம் சுமார் 2510 கிமீ ஆகும்.

•    இவை உத்திரப்பிரதேசம், பீகார், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்கள் வழியாக பாய்ந்து செல்கிறது. இந்தியப் பரப்பின் 25 சதவீதம் கங்கை நதியின் பரப்பே ஆகும்.

•    இமயமலைகளில் அலக்நந்தா மற்றும் பாகீரதி என்னும் இரு தலைப்பிரிவுகளாக உருவாகிறது.

•    கங்கையின் முக்கியத் துணையாறு யமுனை. இவை கங்கையுடன் கலக்குமிடம் அலகாபாத்தில் உள்ள பிரயாகை ஆகும்.

•    ராம்கங்கா, காக்ரா, கண்டக், பாக்மதி,கோசி, சாரதா, சம்பல், கோமதி, ஹூக்ளி ஆகியவை கங்கையின் துணையாறுகள் ஆகும்.

•    ஹரித்துவார், கான்பூர், அலகாபாத்,வாரணாசி, பாட்னா, கொல்கத்தா ஆகியன கங்கையின் மீது அமைந்துள்ள முக்கிய நகரங்களாகும்.

•    கங்கை தனது கழிமுகப் பகுதியில் பல பிரிவுகளாகப் பிரிந்து சுந்தர்பன் டெல்டாவை உருவாக்கிய பின் வங்காளவிரிகுடாவில் கலக்கிறது.

•    வங்கதேசத்தில் கங்கை பத்மா என அழைக்கப்படுகிறது.

•    கங்கை நதியைப் பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் 1995ல் தேசிய நதி பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து1995ல் மத்திய கங்கை நதி அமைப்பும் நிறுவப்பட்டது.

No comments:

Post a Comment