LATEST

Friday, February 14, 2020

மண்வகைகள் பகுதி 1

மண்வகைகள் பகுதி 1

வண்டல் மண்
•    ஆறுகளினால் ஏற்படுகிறது.
•    பழமையான வண்டல் மண் பாகர்.
•    இளமையான வண்டல் மண் காதர்.
•    பொட்டாஷ் மற்றும் பாஸ்பரஸ் சத்து அதிகம்.
•    நைட்ரஜன் குறைவு.
•    எல்லா பயிருக்கும் ஏற்றது.
•    சமவெளிகளில் காணப்படுகிறது.
•    வடஇந்திய சமவெளிகள், நர்மதா, தபதி ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும், தீபகற்ப இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஆறுகளில் டெல்டாப் பகுதிகளிலும் (மகா நதி, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவேரி) குஜராத்திலும், சட்டிஸ்கர் சமவெளியிலும் வண்டல் மண் படிவுகள் காணப்படுகின்றன.

கரிசல் மண்
இது ரெகர் எனப்படும்.
•    இது லாவா குழம்புகளினால் ஆனது.
•    பழுப்பு நிறத்தில் இருந்து கருமை நிறம் வரை காணப்படுகிறது.
•    ஈரப் பதத்தை அதிக நாட்கள் தாங்குவதால் பிசுபிசுப்பாக இருக்கும். எனவே இந்த நிலத்தை மழைக் காலத்திற்கு முன்பு உழுவது நல்லது.
•    சுண்ணாம்பு, இரும்பு, பொட்டாசியம், அலுமினியம், கால்சியம் கார்பனேட்டு, மக்னீசியம் கார்பனேட்டு மற்றும் அலுமினயசத்து குறைவு.
•    பருத்தி, புகையிலை, மிளகாய் போன்ற பயிருக்கு ஏற்றது. கம்பு, சோளம், திணை போன்றவைகளுக்கு ஏற்றது.
•    தக்காண பிரதேசங்களில் கிடைக்கிறது.
•    மாராஷ்டிரா மாநிலத்தின் பெரும்பகுதி, மத்தியப்பிரதேசத்தின் மேற்குப் பகுதி, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சில பகுதிகள் தமிழ்நாட்டில் கோயமுத்தூர், இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கரிசல் மண் காணப்படுகிறது.

No comments:

Post a Comment