சுற்றுச்சூழல் பிரச்சினைகள்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2
1. வளி மண்டலத்தில், புவியின் மேற்பரப்பிலிருந்து 24 – 40 கி.மீ. உயரத்திற்கு காணப்படுகிற மெல்லிய படலம் ஓசோன்.
2. ஓசோன் படலத்தை குளிர்சாதனப் பொருட்களில் பயன்படுத்தும் குளோரோ புளுரோ கார்பன் சேதப்படுத்தி வருகிறது.
3. சராசரியாக 30% - 40% ஓசோன் அளவு இழந்துள்ளதாக ஓசோன் கண்காணிப்பு நிலையங்கள் கண்டறிந்துள்ளன.
4. வளிமண்டலத்தில் வெப்ப தேக்கத்தை ஏற்படுத்துவது பசுமை வீடு வாயுக்கள்.
5. அமில மழையினால் கடலிலுள்ள மிக நுண்ணிய உயிரிகளான பிளாங்டன் உயிர்வாழ இயலாது.
6. கடல்வெப்பம் அதிகரித்தால் பவள பாறைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
7. முருகைகள் வளர்வதற்கான வெப்பநிலை 10டிகிரி செல்சியஸ் வெப்பத்திற்கு மேல் என்பதாகும்.
8. புகையும், மூடுபனியும் கலந்த கலவையே நச்சுப்புகை.
9. நச்சுப் புகையினால் நுரையீரல் நோய், நிமோனியா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
10. காற்று மாசடைதலை குறைக்க கார்களில் வினையூக்கிக் கருவிகளைப் பொருத்தலாம்.
No comments:
Post a Comment