LATEST

Saturday, February 15, 2020

தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 2

தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 2

திருவள்ளுர் மாவட்டம்

•    இம் மாவட்டத்தில் திருக்குப்பம் (திரூர்) என்னுமிடத்தில் நெல் ஆராய்ச்சி நிலையம் உள்ளது Mitsubishi நிறுவனம் திருவள்ளுர் அருகிலும் அமைந்துள்ளது.
•    அம்பத்தூர் நகரில் TI சைக்கிள் தொழிற்சாலை உள்ளது. திருவெற்றியூர் MRF டயர் மற்றும் Royal Enfield தொழிற்சாலை உள்ளது.
•    Ashok Leyland தொழிற்சாலை மற்றும் துறைமுகத்தையும் எண்ணூர் கொண்டுள்ளது.

சேலம் மாவட்டம்

•    சேலத்தில் இரும்பு உருக்கு ஆலை உள்ளது. கஞ்ச மலையில் இரும்புத் தாது பொருட்கள் கிடைக்கின்றது. கிழக்கு மலைத் தொடர் சேர்வராயன் மலைத் தொடரில் ஏற்காடு நகரம் அமைந்துள்ளது.

மேட்டூர்

மருந்துகள், அலுமினியத் தொழிற்சாலை மால்கோ உள்ளது. ஆத்தூர் வட்டத்தில் உள்ள புத்திரகவுண்டன்பாளையம் (Yethapur) என்ற இடத்தில் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம் உள்ளது.

நீலகிரி மாவட்டம்

•   மலைகளின் இராணி என்று அழைக்கப்படும் உதகமண்டலம் இம்மாவட்டத்தில் உள்ளது.
•    இதில் உள்ள தாவரவியல் பூங்கா தாவரங்களின் தோட்டம் என்று அழைக்கப்படுகிறது. இப்பூங்கா 1847ல் துவக்கப்பட்டது.
•    இம்மாவட்டத்தில் இந்துஸ்தான் போட்டோ
•    பிலிம் தொழிற்சாலை நிலையம் உள்ளது
•    முத்தோரை (Muthorai) என்ற இடத்தில் மத்திய உருளை ஆராய்ச்சி நிலையம் உள்ளது.
•    ஆவரங்காடு என்ற இடத்தில் கார்டைட் தொழிற்சாலை உள்ளது
•    தமிழ்நாட்டின் உயர்ந்த சிகரமான தொட்டபெட்டா இம்மாவட்டத்தில் உள்ளது. இதன் உயரம் 2636 மீட்டர் ஆகும். தோட்டபெட்டாவின் தெற்கு சரிவின் கிழக்கு பகுதியில் குன்னூர் அமைந்துள்ளது. இது 1858 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது
•    குன்னூரில் புகழ் பெற்ற Sims Park உள்ளது. முக்கூர்த்தி (உயரம் 2554 மீட்டர்) என்ற இடத்தில் Montane Grasslands மற்றும் shrublands சோலா வனங்கள் காணப்படுகின்றது.
•    திருச்சி மாவட்டம்: இம்மாவட்டத்தில் பாரத மிகு மின் நிலையம் உள்ளது. மேலும் மத்திய அரசின் வாழைப்பழ ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது
•    கன்னியாகுமரி மாவட்டம்: மெஜஸ்டிக் மலையால் சூழப்பட்ட தமிழகத்தின் தென் முனையான இம்மாவட்டத்தின் அட்சரேகை அமைவிடம் 77°15‟ வடக்கு முதல் 77°36‟ வடக்கு வரை மற்றும் தீhக்கரேகை 8°04‟ கிழக்கு முதல் 8°35‟ கிழக்கு வரை ஆகும். தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவக் காற்றால் மழை பெறும் மாவட்டம் இதுவாகும். அதிக மழையை வட கிழக்கு பருவக் காற்றால் பெறுகின்றது.
•    10.8.1741ல் திருவாங்கூர் மார்தாண்ட வர்மன் படைகளுக்கும் டச்சுப் படைகளுக்கும் குளச்சல் என்ற இடத்தில் போர் நடைபெற்றது. இதில் டச்சுப் படை தோல்வியடைந்தது
•    1.11.1956ல் இம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. கேரளாவில் உள்ள திருவாங்கூர் சமஸ்தானத்தில் அடங்கியிருந்த இம்மாவட்டம் தமிழகத்தின் பின் இணைக்கப்பட்டது. கன்னியாகுமரியில் மூன்று கடல்கள் சங்கமமாகின்றன
•    இம்மாவட்டத்தில் உள்ள பேச்சிப் பாறையில் தோட்டக் கலை ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது
•    இங்கு அமைந்துள்ள குளச்சல் துறைமுகம் மலேசிய நாட்டு உதவியுடன் பெரிய துறைமுகமாக மாற உள்ளது குமரி முனையில் திருவள்ளுவர் சிலையும் விவேகானந்தர் இல்லமும் அமைந்துள்ளது

No comments:

Post a Comment