LATEST

Saturday, February 15, 2020

தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 3

தமிழ்நாடு மாவட்டங்கள் குறிப்புகள் பகுதி 3

கோவை மாவட்டம்

•    தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கோயம்புத்தூர் அழைக்கப்படுகிறது.

•    கோயம்புத்தூர் நொய்யல் ஆற்றங்கரையின் மீது அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவு பிரதேசமாக இம்மாவட்டம் பாலக்காட்டுக் கணவாய் மூலம் தென் மேற்கு பருவக் காற்றால் மழையைப் பெறுகின்றது. 

•    இம்மாவட்டத்தின் முக்கிய அணைகள்:

1. ஆழியாறு அணை, பொள்ளாச்சி
2. திருமூர்த்தி அணை, உடுமலைப்பேட்டை
3. அமராவதி அணை, உடுமலைப்பேட்டை
4. சிறுவாணி அணை, வாலையார்
5. பரம்பிக்குளம் அணை, உடுமலைப்பேட்டை
6. சோலையார் அணை, வால்பாறை 

•    கோவை மாவட்டம் அணைக்கட்டியில் Salim Ali Centre for ornithology and Natural History (SACON) என்ற நிலையம் அமைந்துள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் கோவையில் உள்ளது.
•    இந்தியாவின் அதிக பருத்தித் தொழிற்சாலைகள் இங்கு உள்ளது. Central Institute for Cotton Research Regional Station கோவையில் அமைந்தள்ளது. கரும்பு ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது.
•    மதுக்கரையில் ACC சிமெண்ட் தொழிற்சாலை அமைந்துள்ளது.
•    அமராவதியில் புகழ் பெற்ற சைனிக் பள்ளி உள்ளது. பொள்ளாச்சியில் மாட்டு சந்தை ஆசியா புகழ் பெற்றது.

No comments:

Post a Comment