புவியியல் முக்கிய குறிப்புகள் பகுதி 2
பாரன் தீவு
• இந்தியாவில் செயல்படுகின்ற ஒரே எரிமலை பாரன் தீவுஎரிமலை ஆகும்.
• இது போர்ட் பிளேயருக்கு கிழக்கே 135 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
• 1994-95ல் இது வெடித்தது 2000ல் வாயுநெடியுடன் கூடிய புகை வெளியிட்டதால் இது செயல்பாடு உடையதாக கருதப்படுகிறது.
• உலகிலேயே மிகப்பெரிய எரிமலைப் பிரதேசம் தக்காணப் பீடபூமியாகும்.
இந்தியாவின் இயற்கை பேரிடர் வடிவங்கள்
• 26, சனவரி 2001ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பூஜ் என்னுமிடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவின்படி இது 7.7 அளவு ஆகும். இது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது.
போபால் விஷவாயு கசிவு பேரிடர்
• மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் உள்ளது. யூனியன் கார்பைடு என்ற நிறுவனம் இங்கு மீத்தேல் ஜசோசைனேட் நச்சு வாயுவாக மாறியதால் 2, 3.12.1984ல் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதனால் சுமார் 2000 பேர் இறந்தனர்.
அதிர்வலை மண்டலங்கள்
• மக்கள் உயிரை பறிப்பது நிலநடுக்கங்கள் அல்ல. அதன் மேல் உள்ள கட்டிடங்களே என்று கூறுவர்.
• பூமயில் L,P,S அதிர்வலைகள் அதிர்ச்சியை உருவாக்குகின்றது.
• L waves travel along the surface of the earth’s crust.
• P waves propagate, they move material in a path parallel to the direction of movement.
• S waves move objects at right angles to their direction of motion.
• இந்தியாவின் மொத்தப்பரப்பில் சுமார் 50-60 விழுக்காடு பரப்பு நில அதிர்வலைத் தாக்கங்களுக்கு உட்பட்டது. இந்தியா, II, III, IV, V என்று நான்கு அதிர்வலை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டது.
• இமயமலை அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கட்ச் வளைகுடாவும் (V மற்றும் IV) அதி அபாய மற்றும் அபாய மண்டலத்தில் அமைந்து உள்ளன.
• தமிழ்நாடு நில அதிர்வில் மித மற்றும் குறைந்த அபாய நேர்வு மண்டலமாக வகையீடு செய்யப்பட்டுள்ளது.
• நீலகிரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மற்றும் கோயம்புத்தூர், மாவட்டங்களில் மித அபாய நேர்வு மண்டலமாக வகையீடு செய்யப்பட்டுள்ளது.
• நில அமைப்பியல் ரீதியாக தக்காண பீடபூமி எந்தவித இடர்களையும் தாங்கும் திறம் கொண்டது.
• சென்ற நூற்றாண்டில் இந்தியா எதிர் கொண்ட பேரிடர்களிலேயே மிக மோசமான நிகழ்ச்சி ஒரிசா கடற்புயல் ஆகும்.
• தேசிய பேரிடர்கள் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு குறித்து தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
• 16-7-2004 அன்று கும்பகோணம் பள்ளி தீ வித்து நடந்தது.
• இந்தியாவில் காஷ்மீர் பகுதிகளில் பனிப்பாறைச் சரிவுகள் ஏற்படுகின்றன.
• மொத்த்ப பரப்பில் 80 விழுக்காடு காடுகள் உள்ள மாநிலம் அருணாச்சலப்பிரதேசம்.
No comments:
Post a Comment