LATEST

Saturday, February 15, 2020

புவியியல் முக்கிய குறிப்புகள் பகுதி 3

புவியியல் முக்கிய குறிப்புகள் பகுதி 3

கங்கை நீரை பயன்படுத்திக் கொள்ளும் மாநிலங்கள்

1. உத்திரப்பிரதேசம் 2. மத்தியப்பிரதேசம் 3. பீகார் 4. ராஜஸ்தான் 5. மேற்கு வங்காளம்
•    கங்கை நதி வங்காள விரிகுடாவில் கலக்கும் முன்பு பிரம்மபுத்திராவுடன் சேர்ந்து உலகின் பெரிய வண்டல் சமவெளியை (59,000 ச.கி.மீ தோற்றுவித்துள்ளது)
•    மேலும் வங்காளத்தில் சுந்தரவன் காடுகளையும் தோற்றுவித்துள்ளது
•    கங்கை நதி அதிகமாக பாயும் இடம்: உத்திரப்பிரதேசம்
•    கோசி: இது திபெத்தில் உற்பத்தியாகிறது
•    இந்தியாவில் தென்மேற்கு பருவக் காற்று பொய்ப்பதால் வறட்சி ஏற்படுகின்றன
•    இந்தியாவில் அதிக அளவு பாசன வசதி பெற்ற மாநிலம் பஞ்சாப்
•    ஒதுக்குக் குடியிருப்புகள் சாதாரணமாக காணப்படும் பகுதி: இராஜஸ்தான்
•    பத்துலட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வசிக்கும் நகரங்கள் 35
•    அதிக நகர்புறம் உடைய மாநிலம்: பஞ்சாப்
•    இந்தியாவில் திட்டமிடப்பட்ட நகரம்: சண்டிகர்
•    14-1-1969 முதல் மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
•    இருப்புப்பாதை தொடர்பில்லாத புகழ்பெற்ற கோடைவாழிடம்: கொடைக்கானல்
•    குஜராத் மாநிலத்தில் அலாங் என்னுமிடத்தில் கப்பல் உடைக்கும் தொழிற்சாலை உள்ளது
•    ஹரியானாவில் உள்ள கர்நால் என்னுமிடத்தில் டெலிபோன் கேபிள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது
•    பீகாரில் உள்ள கர்நால் என்னுமிடத்தில் டெலிபோன் கேபிள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது
•    பீகாரில் உள்ள சிந்திரியில் உரத்தொழிற்சாலை உள்ளது.
•    இந்தியாவில் மிக முக்கியமான அதிகமான பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்ட இடம் திக்பாய்
•    நிலக்கரி பெட்ரோல் போன்றவை புதுப்பிக்கப்பட்ட முடியாத மூலப்பொருள் ஆகும்.
•    தேயிலை - இது பெருந்தோட்ட வேளாண்மையாகும்
•    கோதுமை - இது பரந்தமுறை வேளாண்மையாகும்
•    நெல் - இது செறிந்த முறை வேளாண்மை ஆகும்
•    கரிசல் மண் - இது கருமை நிறம் கொண்டது. நீரை தக்க வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது
•    தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் செம்மண் காணப்படுகிறது
•    மண்வளம் பயிர் சுழற்சி முறையில் பாதுகாக்கப்படுகிறது
•    கால்வாய் பாசனம் மிகுந்த மாவட்டம் தஞ்சாவூர்
•    இலட்சத்தீவுகளில் Bitra Island என்ற பறவைகள் சரணாலயம் உள்ளது
•    முதுமலை காட்டில் யானைகள் காணப்படுகிறது
•    இந்தியாவின் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடு கங்கை டெல்டா பகுதிகளில் உள்ளது
•    தென்மேற்கு பருவக்காற்றால் அதிக மழைப்பெறும் இடம் மேற்கு சோழமண்டல கடற்கரை – கர்நாடக கடற்கரை
•    வானிலை ஒரு நாளின் காலை மற்றும் மாலைக்குரியது.
•    இந்திய பருவக்காற்று தொடர்புடையது மொசம்பிக் நீரோட்டமாகும்
•    இந்தியாவில் பல்நோக்கு அடிப்படையில் கட்டப்பட்ட முதல் திட்டம் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் ஆகும். அதிக அனல்மின் சக்தி தரும் திட்டம் இதுவே.
•    கோசி நதி வடக்கு பீகாரின் துயரம் எனப்படும். நாகர்சுனா சாகர் திட்டம் புத்துறவி நாகர்சுனா பெயரில் கட்டப்பட்டது.
•    தாமோதர் நதி வங்காளத்தின் துயரம் எனப்படும்
•    கங்கை நதி பாகீரதி அலக்நந்தா என்ற இருநதிகளின் இணைப்பு ஆகும்
•    ஆரவல்லி மலைத்தொடர் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது
•    மைக்கால் மலைத்தொடர் மத்தியப்பிரதேசத்தில6; உள்ளது
•    மேற்கு வங்காளத்திற்கு அடுத்ததாக பீகாரில் சணல் பயிரிடப்படுகிறது

No comments:

Post a Comment