மக்களாட்சி
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 3
1. ஒரு மித்த கருத்துடைய மக்களால் அரசியல் அதிகாரத்தைப் பெறும் நோக்கில் உருவாக்கப்பட்ட அமைப்பு அரசியல் கட்சி ஆகும்.2. அரசியல் கட்சிகள் அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக திகழ்கின்றன.
3. அரசியல் கட்சிகளை ஜனநாயக முறையில் மூன்று வகைகளாகப்
பிரிக்கலாம்.
4. இந்திய தேர்தல் ஆணையம் மூன்று நபர்களைக் கொண்டது.
5. ஒரு கட்சி முறையில் செயல்படும் நாடுகளில் இரண்டு கியூபா, சீனா.
6. இரு கட்சி முறையில் செயல்படும் நாடுகளில் இரண்டு அமெரிக்கா, இங்கிலாந்து.
7. பல கட்சி முறையில் செயல்படும் நாடுகளில் இரண்டு இந்தியா, பிரான்சு
8. அமெரிக்காவில் ஜனநாயகம் மற்றும் குடியரசு என இரு கட்சிகள் இயங்கி வருகின்றன.
9. நாடாளுமன்றம் அல்லது மாநில சட்ட சபை செயல்படுவதற்குரிய காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
10. இந்தியாவில் வாக்கு செலுத்த உரிமையுள்ளவர்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment