LATEST

Thursday, February 20, 2020

இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள் பகுதி 4

இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள் பகுதி 4

8. சுதந்திரமான மற்றும் ஒருங்கிணைந்த ஒற்றை நீதியியல் அமைப்பு

•    இந்தியா ஓர் ஒருங்கிணைந்த ஒற்றை நீதியியல் அமைப்பைக் கொண்டிருக்கிறது. நீதியியல் அமைப்பின் உச்சநிலை நீதிமன்றமாக உச்சநீதிமன்றம் விளங்குகிறது. உச்சநீதி மன்றத்திற்குக் கீழ்நிலையில் உயர்நீதிமன்றங்கள் உள்ளன.
•    உயர்நீதிமன்றங்கள் தமக்குக் கீழ்நிலையில் உள்ள நீதிமன்றங்களளைக் கட்டுப்படுத்தவும், மேற்பார்வையிடவும் செய்கின்றன. ஆக, இந்திய நீதித்துறை இவ்வாறு ஒரு பிரமிடைப்போல விளங்குகிறது. கீழ்நிலை நீதிமன்றங்கள் அடித்தளமாகவும், உயர்நீதிமன்றங்கள் நடுவிலும், உச்சநீதிமன்றம் மேல்முனையாகவும் அமைந்துள்ளன.
•    இந்த ஒரே சீரான நீதியியல் அமைப்பு, எல்லாக் குடிமக்களுக்கும் ஒரே சீரான முறையில் நீதியை முன்னெடுக்கவும், உறுதிப்படுத்தவும் இலக்கைக் கொண்டுள்ளது. மேலதிகமாக அரசியலமைப்புச் சட்ட விதிகள் இந்திய நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிற வகையில் அமைந்திருப்பதால் நிர்வாகப்பிரிவு – சட்டமியற்றும் பிரிவுகளின் செல்வாக்கில் இருந்து விடுபட்டுத் தனித்து இது இருக்கிறது.

9. ஒற்றைக் குடியுரிமை

•    ஐக்கிய அமெரிக்கக் குடியரசுகளின் விஷயத்தில் அமைந்திருப்பது போல, ஒரு கூட்டாட்சி அரசில், குடிமக்கள் இரட்டைக் குடியுரிமையைப் பெற்று அனுபவிப்பதே வழக்கமாக அமையும். இந்தியாவில் வழங்கப்பட்டிருப்பது ஒற்றைக் குடியுரிமை மட்டுமே.
•    இதன் அர்த்தம், ஒவ்வோர் இந்தியரும் அவர்/அவள் பிறந்த இடம் எதுவாக இருப்பினும், வசிப்பிடம் எதுவாக இருப்பினும் இந்தியக் குடிமக்கள் என்பதே. அவரோ/அவளோ ஜார்க்கண்ட், உத்தராஞ்சல் அல்லது சத்தீஷ்கர் போன்ற ஏதேனுமொரு உட்பகுதி மாநிலத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் கூட அதன் குடிமக்களாக அவர்கள் ஆகமாட்டார்கள்; மாறாக இந்தியாவின் குடிமக்களாகவே நீடிப்பார்கள். இந்தியாவின் எல்லாப்பகுதிகளிலும் எல்லாக் குடிமக்களும் அனைத்து உரிமைகளையும் சமமாகப் பெற்று அனுபவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment