இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள் பகுதி 5
10. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை
• ‘ஒரு நபர் ஒரு வாக்கு’ என்ற அடித்தளத்தின் மீது இந்திய ஜனநாயகம் செயல்படுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும்/மகளும், 18 வயதோ அல்லது அதற்கு மேலோ ஆகியிருந்தால் அவர்களின் சாதி, இனம், மதம் அல்லது என்னவாக இருப்பினும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களே. இந்திய அரசியல் சட்டம், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற வழிமுறையின் மூலமாக, இந்தியாவில் அரசியல் சமத்துவத்தை நிறுவியுள்ளது.
11. அவசர நிலைக்கால விதிகள்
• அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள், சாதாரண காலங்களில் செயல்படுவது போல அரசாங்கம் செயல்பட முடியாமற் போகிற சு10ழ்நிலைகளும் எதிர்காலத்தில் உருவாகக்கூடும் என்று முன் உணர்ந்திருக்கின்றனர். அவசர நிலைக் காலச் சுழ்நிலைகள் மூன்று வகையானவை.
(a) போர், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதம் தாங்கிய கலகம் போன்றவற்றால் ஏற்படக்கூடிய அவசர காலநிலை.
(b) மாநிலங்களில், அரசியல் சட்டரீதியானநிர்வாக இயந்திரம் தோல்வி அடைந்து விட்ட சுழ்நிலையில் எழும் அவசர காலநிலை, மற்றும்,
(c) நிதியியல் அவசரகால நிலை.

No comments:
Post a Comment